சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபத்பாந்தவனாக வரும் 108 ஆம்புலன்ஸ்... இந்த எண்ணுக்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா

இந்து மதத்தில் 108 என்பது புனித எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்றால் கூட 108 முறை ஜபிக்க சொல்லி நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான எண் அவரச ஊர்திக்கு வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறையை அழைக்க அவசர எண்ணாக 100 என்ற எண்ணையும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத்துறையினரை அழைக்க 101 என்ற என்ற எண்ணையும் அழைத்து வந்தோம். இப்போது மக்கள் அதிகம் அழைப்பது 108 என்ற என்ற அவசர எண்ணைத்தான். 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணெய் ஒதுக்கியதற்கு பின்பும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்துள்ளது. பொதுவாக இந்து மதத்தில் 108 என்பது புனித எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்றால் கூட 108 முறை ஜபிக்க சொல்லி நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான எண் அவரச ஊர்திக்கு வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஆபத்பாந்தவானாக அநாத ரட்சகனாக உள்ளது 108 ஆம்புலன்ஸ் சேவை. இன்றைய நோய் தொற்று காலத்தில் எப்போது அழைத்தாலும் சில நிமிடங்களில் வீடு வாசல் தேடி வந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள்.

Do you know the reason behind using 108 as an emergency number

விபத்தில் நோயில் சிக்கியவர்களின் உயிரை காப்பவர்கள் மருத்துவர்கள் அவர்களை கடவுளாக கொண்டாட வேண்டும். மருத்துவர்கள் மூலவர்கள் என்றால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் கடவுள்கள்தான் அவர்களை உற்சவ மூர்த்திகளாக போற்றி வணங்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் அத்தனை பேரும் பரிவார தெய்வங்களாக இன்றைய சூழ்நிலையில் கொண்டாடப்பட வேண்டியவர்களே. ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண் எப்படி வந்தது என்பதில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன பார்க்கலாம்.

நோய் பாதிக்கப்பட்டவர்கள் நடக்க முடியாமல் போய் விட்டால் அவர்களை தோளில் தூக்கி சுமந்து செல்வார்கள். கட்டிலில் படுக்க வைத்து எடுத்து செல்வார்கள். 1487 ஆம் ஆண்டு ஐரோப்பா கண்டத்தில் உள்ள எசுப்பானிய என்னும் நாட்டில் தான் முதன் முதலில் அவசர ஊர்தி நடைமுறைக்கு வந்தது. நாளடைவில் 19 ஆம் நூற்றாண்டில் நவீன சிகிச்சை கருவிகளோடு கூடிய ஆம்புலன்ஸ் பரவலாக பல நாடுகளில் வளம் வந்தன.

டாக்டர் வெங்கட் செங்கவல்லி என்பவர்தான் இதற்கான விதையாக இருந்துள்ளார். ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். "Emergency Management And Research Institute" என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார். அவருடைய ஆரய்ச்சியின் விளைவாகவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஒரு பொது எண் வேண்டும் என்று நினைத்து 108 என்ற எண்ணை தேர்வு செய்து அப்போதய ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் கூறியுள்ளார். சில நாட்களில் அவர் விபத்தில் இறந்து போகவே அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரா முதல்வரை பார்த்தும் காரியம் நடைபெறவில்லை. இறுதியாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த டாக்டர் வெங்கட் செங்கவல்லி வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டினார். இந்த தகவலை அவரே ஒரு விழாவில் கூறியுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை என்பது முதன் முதலில் ஆந்திர மாநிலத்தில் அரசு சார்பாக 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பிறகு குஜராத் மாநிலத்திலும் இது துவங்கப்பட்டது. முன்னாள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதை தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் கொண்டுவந்தார். தற்போது 108 ஆம்புலன்ஸ் திட்டமானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ராஜஸ்தான், கோவா, குஜராத், உள்ளிட்ட 20 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களும் பயனடையும் வகையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது.

ஏழை எளிய மக்களின் நண்பனாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பொதுவாக இந்து மதத்தில் 108 என்பது புனித எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்றால் கூட 108 முறை ஜபிக்க சொல்லி நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான எண் அவரச ஊர்திக்கு வைக்கப்பட்டுள்ளது.

108 பெயர்கள் ஒவ்வொரு கடவுள்களுக்கும் இருப்பதாக, குறிப்பிட்ட ஒரு மதத்தில் கருதப்படுகிறது. 108 முறை ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஒரு ஜபம் முற்றுப் பெறுகிறது, ஜபம் செய்யும் போது பயன்படுத்தப்படும் மணிகளின் எண்ணிக்கையும் 108.

108 என்பது எந்த ஒரு நெருக்கடியின் போதும், நினைவில் கொள்ள உளவியல் ரீதியாக உதவுகிறது. டெலிபோனின் டயல் பேட் பார்த்து டைப் பார்க்கும்போது, ​​நம் கண்கள் தானாகவே திரையின் இடது முனையில் உள்ள முதல் எண்ணைப் பார்த்து, படிப்படியாக கீழே சென்று, பின்னர் இடதுபுறமாக நகருமாம், இங்கு குறிப்பிட்டுள்ள முதல், கீழ், கீழ் இடது 108 தான்.

நம்முடைய கண்கள் முதலில் எண் ஒன்றை தான் கவனிக்குமாம் அடுத்து பூஜ்யம் மற்றும் எட்டை எளிதில் கவனிக்குமாம். அதனால் 108 என்ற எண்ணை அவசரமான பதற்றம் நிறைந்த நேரத்திலும் எளிதில் டயல் செய்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

கலாச்சார ரீதியாக 1 ஆணின் எதிரிணையையும் 0 பெண்ணியத்தையும் குறிக்கிறது, 8 முடிவிலி அல்லது நித்தியத்தையும் குறிக்கிறது, அதாவது வாழ்வை ஒன்றாகவோ, ஒண்ணுமில்லாமாகவும் மற்றும் எல்லாமாகவும் அனுபவிக்க முடியும்.
உயிரை காக்கும் அத்தணை எண்களும் 108 என்ற எண்ணைச் சார்ந்து இருப்பதால், அவசர எண்ணாகவும் அதனையே தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ 108 என்ற எண்ணும் ஆம்புலன்ஸ் வாகனமும் பலரது உயிரை காப்பாற்றி ஆபத்பாந்தவனாக உதவுகிறது.

English summary
108 is a free telephone number for emergency services in India. It is currently operational in 20 states. Do you know the reason behind using 108 as an emergency number for the ambulance ? 108 number has a great importance in every aspect. Here are some of them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X