விஜயகாந்துக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமே இல்லையாமே? ராவுத்தரின் அன்பு கட்டளை! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் தனக்கு திருமணமே வேண்டாம் என ராவுத்தரிடம் அடம்பிடித்த கதை உங்களுக்கு தெரியுமா?

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். அவர் இல்லாவிட்டால் கேப்டன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். திரைத்துறை என்றில்லை அரசியலிலும் ராவுத்தர்தான் விஜயகாந்தை சோபிக்க வைத்தார்.

Do you know Vijayakanth not wanted to marry anyone?

ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பியும் இருந்தார். எந்த படத்தில் நடிக்க வேண்டும், கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து அதை இறுதி செய்யும் அதிகாரமும் ராவுத்தருக்குத்தான் விஜயகாந்த் வழங்கியிருந்தார்.

இருவரின் நட்புக்கும் எல்லையே இல்லை என சொல்லலாம். வரவு செலவு கணக்கு வழக்குகளை கூட ராவுத்தர்தான் கவனித்துக் கொண்டார் என சொல்வதுண்டு. ராவுத்தருக்கு திருமணமாகி ஒரு மகன் பிறந்தார். அந்த மகன் மீது விஜயகாந்துக்கு மிகவும் அன்பும் பாசமும் அதிகமாகும். விஜயகாந்தை விஜியப்பா என்றுதான் அழைக்க வைத்தார் ராவுத்தர்.

இந்த நிலையில் விஜயகாந்த் ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் அவருக்கு ராவுத்தர் பெண் பார்க்கத் தொடங்கினார். ஆனால் விஜயகாந்தோ அதெல்லாம் வேண்டாம். எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றாராம். அதற்கு ராவுத்தர், "ஏன்! நீ சம்பாதிக்கும் காசை என்ன செய்ய போகிறாய், உனக்கென வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உனக்கு பிறக்கும் குழந்தையை நான் தாங்க வேண்டும்" என்றாராம். அதற்கு விஜயகாந்த் ராவுத்தர் மகனை காட்டி, "நான் சம்பாதிப்பதை இவனுக்குத்தான் தர போகிறேன்" என தெரிவித்தாராம். இதற்கு ராவுத்தர் நெகிழ்ந்தாராம். ஆனால் விஜயகாந்தின் அந்த கருத்துக்கு மறுத்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாராம்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் 37 ஆவது வயதில் 1990 ஆம் ஆண்டு குடியாத்தத்தை சேர்ந்த பிரேமலதாவை விஜயகாந்த் மணந்தார். அவரது திருமணத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு இரு மகன்கள் பிறந்தனர். மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்தார்.

இதைத் தொடர்ந்து இளைய மகன் பிறந்ததும் அவருக்கு சையது இப்ராஹிம் என பெயரிட விஜயகாந்த் நினைத்தாராம். ஆனால் ராவுத்தர்தான் அப்படியெல்லாம் வைக்கக் கூடாது. நாளை உன் மகன் வெளிநாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் எடுக்கும் போது அப்பா, அம்மா பெயர் இந்துவாக இருக்கும் போது மகனின் பெயர் முஸ்லீம் பெயராக இருக்கிறதே என குழப்பத்தை விளைவிக்கும் என்றாராம். இதன் பின்புதான் ராவுத்தர் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் தனது மகனுக்கு சண்முக பாண்டியன் என பெயரிட்டாராம். ஆனாலும் தனது மகனுக்கு இப்ராஹிம் பெயரை சேர்த்து வைக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்டே தான் இருந்ததாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+