சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு பரவலுக்கு பிறகு, சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றால் கூட சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் தயங்குகிறார்கள்.

ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாக, மருத்துவரைப் பார்க்கச் சென்றால் கூட ஒரு அச்சம் காரணமாக தான், உங்களுக்கு படபடப்பு ஏற்பட்டிருக்கும் என்று பார்க்காமலேயே முடிவு செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் அச்சம் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதால் மருத்துவர்களுக்கு வருமானம் பாதிக்கிறது. செவிலியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி?- அதிகாரிகள் ஆய்வு கொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி?- அதிகாரிகள் ஆய்வு

கவச உடையில் மருத்துவர்கள்

கவச உடையில் மருத்துவர்கள்

எனவே சென்னை உட்பட பல நகரங்களிலும் முழு கவச உடை அணிந்து மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிகிறது. ஆனாலும் ஒவ்வொரு நோயாளியையும் கொரோனா நோயாளியாகவே பார்த்து மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர் மருத்துவர்கள். முழு கவச உடை அணிய முடியாத இடங்களில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இடையேயான உறவு என்பது மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. ஸ்டெதஸ்கோப் வைத்து இதயத்துடிப்பை கூட பரிசோதனை செய்யாமல் 6 அடி தள்ளி வைத்து விளக்கம் கேட்டு மருந்துகளை கொடுத்து அனுப்புகிறார்கள் மருத்துவர்கள்.

நோயாளிகள் நிலை

நோயாளிகள் நிலை

காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கேட்கவே வேண்டாம். வாசலிலேயே நோட்டீஸ் அடித்து இதற்கு மேல் உள்ளே வரவேண்டாம் என்று கூறக்கூடிய மருத்துவர்களும் இருக்கிறார்கள். இதனால் எத்தனையோ வகையான நோய்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படும் நிலை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே இருக்கிறது.

காய்ச்சல்

காய்ச்சல்

ஒரு பக்கம் காய்ச்சலுக்கு, மருந்தகங்கள் நேரடியாக மருந்து தரக் கூடாது என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கணிசமானோர் அச்சப்பட்டு காய்ச்சல் நோயாளிகளை பார்க்க தயங்குகிறார்கள். எனவே கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டிய நிலைக்கு சாதாரண காய்ச்சல் வந்தால் கூட மக்கள் தள்ளப்படுவது பார்க்க முடிகிறது.

ஆன்லைன் கன்சல்டேசன்

ஆன்லைன் கன்சல்டேசன்

இதன் அடுத்த கட்டமாக தான் ஆன்லைன் கன்சல்டேஷன் செய்யப்படுகிறது. நேரில் சென்றால் கூட தொட்டுப் பார்க்கவில்லை என்றால் ஆன்லைனில் கன்சல்டேசனுக்கும் அதற்கு பெரிய வித்தியாசம் இல்லைதானே. எனவே மக்கள் ஆன்லைனை நாடுகிறார்கள். மற்ற துறைகளுக்கு இது பொருந்தலாம். மருத்துவத்துறைக்கு இது எந்த அளவுக்கு பொருந்தும் என்பது கேள்விக்குறி. சில டாக்டர்கள் கை ராசிக்காரர்கள். தொட்டுப்பார்த்தாலே குணமாகிவிடும் என்று நமது மக்கள் பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம் ஆனால் இப்போது தொட்டுப் பார்க்காமல் வீடியோவில் பார்த்து சிகிச்சை அளிப்பதால் அந்த ராசி எப்படி பலன் கொடுக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை. நாம் இதில் ராசி என்று சொல்வது மருத்துவ நடைமுறையைத்தான். மருத்துவர்களுக்கு என்று சில வழிமுறைகளும், நெறிமுறைகளும் உள்ளன. அதன்படி சிகிச்சை அளிக்கும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும். ஆனால் கொரோனா நோய்க்காக பயந்து பல்வேறுபட்ட நோயாளிகளையும் எட்ட நின்று சிகிச்சை அளிக்கும் நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.

முகக் கவசம்

முகக் கவசம்

மருத்துவர் ஜெயரஞ்சன் ராம் இதுபற்றி கூறுகையில், முகத்தில் முக கவசம் அணிந்தபடி டாக்டர்களிடம் நோயாளிகள் வருகிறார்கள். நோயாளிகள் முகத்தை முழுமையாக பார்த்து கூட நோயை கண்டுபிடிக்க முடியாத நிலைமைக்கு தான் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இன்னொரு பக்கம் மருத்துவமனையில் காத்திருக்கும் இடத்தில் கூட்டம் அதிகரித்து விடக்கூடாது என்பதால் முன்பதிவின் போது அப்பாயின்மென்ட்களை குறைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது என்றார் அவர்.

Recommended Video

    Covaxin: Corona Vaccine ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைமுறைக்கு வருமா? | Oneindia Tamil
    மன நலம்

    மன நலம்

    மற்றொரு மனநல மருத்துவர் கூறுகையில், மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக வருவோருக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம். கூடவே மருந்து மாத்திரைகள் கொடுக்கிறோம். மருத்துவரிடம் வரும்போது அவர்களின் தோள் மீது கைபோட்டு ஆறுதலாக பேசும்போது பாதிப் பிரச்சினை சரியாகிவிடும். இப்போது அதற்கும் வழி கிடையாது. ஆன்லைன் மூலமாக மனநல கவுன்சிலிங் கொடுப்பது ஆபத்தானது. அவர்கள் ஆன்லைன் விஷயங்களுக்கு அடிமையாகி விடும் சூழ்நிலை அதிகமாக உள்ளது. மற்றவர்களைவிட மனக்கட்டுப்பாடு அவர்களுக்கு குறைவாக இருக்கும் என்பதால் செல்போனில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் எங்கள் துறை சார்ந்த பிரச்சினைகள் என்கிறார் அவர். எப்போது கொரோனா வைரஸ் ஒழியுமோ, அப்போதுதான் ஒரு கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி அனைத்து மக்களும் நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்பதற்கு இந்த மருத்துவர்-நோயாளி உறவுகளும் ஒரு சாட்சி.

    English summary
    Doctors can't interact with patients in our days because of coronavirus it will lead to many consequences says health sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X