கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை.. நலமாக உள்ளார்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
சென்னை: கமல்ஹாசனுக்கு கால் எலும்பில் ஏற்பட்ட தொற்றை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வலது கால் எலும்பில் ஏற்பட்ட லேசான தொற்றுநோய்க்காக இன்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவர் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் உடல்நிலை தேறி வருகிறது என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முட்டியையும் கணுக்காலையும் இணைக்கும் எலும்பான டிபியலில் லேசான தொற்று ஏற்பட்டது. இந்த எலும்பானது உடலின் பெரும்பாலான எடையை சுமக்கிறது.

அவர் நலமாக இருப்பதாகவும் நான்கைந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கமலின் மகள்கள் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.