சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கறுப்பு ஆடு".. லீக் ஆன மேட்டர்.. செம டென்ஷனில் ஸ்டாலின்.. லிஸ்ட் ரெடியாமே.. பட்டென திரும்பிய பாஜக

திமுகவின் முக்கிய அதிகாரிகள் களையெடுக்க போவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம்.. இதனால் விரைவில் களையெடுப்பு நடப்பதற்கான அறிகுறி தென்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

    தேசியக் கொடியில் சாதிப் பாகுபாடு கூடாது.. தமிழ்நாடு அரசு அதிரடி

    கடந்த மாதங்களில், ஆளுநர் ரவி மீதான அதிருப்திகள் வெடித்ததையடுத்து, திமுக அரசும், அதன் கூட்டணிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

    ஆனால் திடீரென இந்த கருத்து மோதல்கள் மெல்ல மெல்ல குறைந்தன.. ஆளுநர் ஏதாவது சர்ச்சையாக பேசினால் மட்டுமே அதற்கு திமுக பதிலடி தந்து வந்தது. அதிலும் ஆர்எஸ் பாரதி அல்லது டிஆர் பாலு போன்ற முக்கிய தலைவர்கள் மட்டும் பதில் சொல்லி வருகின்றனர்.

    உலக மக்களால் பாராட்டப்படும் தமிழகம்! காரணமே ஸ்டாலின் தான்! கொங்கு ஈஸ்வரன் பாராட்டு மழை!உலக மக்களால் பாராட்டப்படும் தமிழகம்! காரணமே ஸ்டாலின் தான்! கொங்கு ஈஸ்வரன் பாராட்டு மழை!

     பட்டு வேட்டி

    பட்டு வேட்டி

    அதேசமயம், பாஜக மீதான திமுகவுக்கு நெருக்கமும் கூடி வருகிறது.. இதற்கு சமீபத்தில் பிரதமர் சென்னை வந்தபோது நடந்த இணக்கமான சம்பவங்களே சாட்சியாகும்.. பிரதமர், ஸ்டாலின் 2 பேருமே அருகருகே உட்கார்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்... அப்போது, முதல்வர் ஏதோ சொல்ல, அதனை கேட்ட பிரதமர் செல்லமாக விரலை நீட்ட, அவரது கையை பிடித்தபடி சிரித்தார் ஸ்டாலின்.. பிறகு, சிறிது நேரம் முதல்வரின் தோளில் தட்டிகொடுத்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.. இப்படி ஒரு நிகழ்வை மேடையில் பார்த்தது, 2 விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது.

     பயம் இருக்கட்டும்

    பயம் இருக்கட்டும்

    ஒன்று, எவ்வளவுதான், பொதுவாழ்க்கையில், போட்டி பொறாமைகள் இருந்தாலும், அனைத்தையும் மிஞ்சி வெளிப்பட்டு விடுகிறது அரசியல் நாகரீகம் என்றே கருதப்பட்டது.. மற்றொரு பக்கம், முதல்வர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ வருத்தமோ மேலிடத்துக்கு இல்லை என்றும் தெளிவாகியது.. எனினும் இந்த திடீர் இணக்கம் எதற்காக என்ற சந்தேகங்களையும் எழுப்பியது.. பாஜக இல்லாமல் திமுகவால் ஆட்சி நடத்த முடியாது என்று ஒரு தரப்பும், அந்த பயம் இருக்கட்டும், திமுக தயவு எப்போதுமே பாஜகவுக்கு தேவை என்று இன்னொரு தரப்பும் இதை விமர்சித்தன.. ஆனால், இதன் உண்மை காரணம் என்ன?

    இணக்கம்

    இணக்கம்

    மத்திய அரசுடன் சுமுகமான போக்கை கையாளும்போது, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களையும், அதன்மூலம் போதிய நிதியையும் தமிழக அரசால் பெற முடியும் என்பதுதான் அடிப்படை எண்ணமாக உள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஒரு அரசியல் கட்சியாக கொள்கைரீதியில் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதிலும் மாற்றம் இல்லை.. இதுதான் திமுகவின் உறுதிப்பாடு, நிலைப்பாடாக உள்ளது.. அதுமட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக தரப்பில் கருத்து சொன்னால், அதற்கு சரியான பதிலடியை தரலாமே தவிர, மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்தியில் ஆளும் பாஜகவுடன் தேவையில்லாத பிரச்சினைகள் செய்யக்கூடாது என்றே முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாராம்.

     போட்டோ எங்கே?

    போட்டோ எங்கே?

    இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பிரச்சனை கிளம்பியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் போட்டோ இடம் பெறாமல் போய்விட்டது.. இதனால் கொந்தளித்து போன பாஜகவினர், திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. அத்துடன் அந்த விளம்பரங்கள் மேலேயே, மோடி போட்டோவையும் ஒட்டினர்.. இந்த விவகாரம் கோர்ட் வரையும் சென்றுவிட்டது.. இதுபற்றி மத்திய அரசு அதிகாரிகள் முன்கூட்டியே சுட்டிக்காட்டியபோதும், தொடர்புடைய மாநில அரசு அதிகாரிகள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வெடித்தது..

     அப்செட் ஸ்டாலின்

    அப்செட் ஸ்டாலின்

    அதற்கு பிறகு பிரதமர் படத்தை வைத்தே ஆக வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டபிறகுதான், விளம்பரத்தில் மோடி படம் இடம் பெற்றது. கோர்ட் வரை சென்று, திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது, முதல்வருக்கு அப்செட்டை தந்துவிட்டதாம்.. விளம்பரங்களில் மோடி படம் இடம் பெறாததற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்தபோது, அதிகாரிகள் சிலர், தனிப்பட்ட தங்கள் மோடி எதிர்ப்பு கொள்கையால் இப்படி படத்தை இடம்பெறாமல் தடுத்தது முதல்வரின் காதுக்கு சென்றுள்ளது.. அதுமட்டுமல்ல, மேலும் சில தகவல்களையும், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கொண்டு சென்றுள்ளனர்.

     செம கடுப்பு

    செம கடுப்பு

    ஸ்டாலினிடம் கருத்தியல் ரீதியாக, அல்லது தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசுடன் மோதலாமே தவிர, தனிப்பட்ட முறையில் பாஜகவை சீண்டுவது சரியல்ல என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதத்தில் சிலர் புரளிகள் கிளப்பிவிட்டு வருவதாகவும் முதல்வருக்கு தகவல் சென்றுள்ளது... அதுமட்டுமல்ல, சில அதிகாரிகள், முக்கிய டேட்டாக்களை பாஜக தரப்புக்கு பாஸ் செய்யப்படுவதாகவும் அதை வைத்தே பாஜக, திமுகவை விமர்சித்து வருவதாகவும், ஸ்டாலின் காதுக்கு எட்டியதாம்.

     களையெடுப்பு

    களையெடுப்பு

    இதையடுத்து, "மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவில் அரசியலை புகுத்தக் கூடாது, மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை மட்டும் அதிகாரிகள் கவனித்தால் போதும், என்று கண்டிப்புடன் கூறிய முதல்வர், பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ள அதிகாரிகள் யார் என்ற லிஸ்ட் எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளாராம்.. தேவையில்லாமல் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் குழப்பம் ஏற்படுத்தும் அதிகாரிகளை களையெடுக்கவும் முடிவெடுத்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்..

    "களையெடுப்பு"

    "களையெடுப்பு" என்பது திமுக அரசில் அரிதாகவே நடக்கிறது.. ஆட்சி துவங்கியது முதல் கிட்டத்தட்ட 10 முறையாவது களையெடுப்பு, அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் நீக்கம் என்றெல்லாம் தகவல்கள் பரபரத்தாலும், முதல்வரின் கரிசனத்தினால், அப்படி எதுவும் நடக்கவில்லை.. அதேசமயம், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்தும் வருகிறார் ஸ்டாலின்.. ஆனால் "களையெடுப்பு" போன்று அடிக்கடி சாட்டையை முதல்வர் சுழட்டுவது, சிண்டுமுடியும் அதிகாரிகளுக்கு கலக்கத்தையே ஏற்படுத்தும், இதன்மூலம் திமுக அரசும் தேவையில்லாத தர்மசங்கடங்களை தவிர்க்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

     ஸ்ட்ரிக்ட் உத்தரவு

    ஸ்ட்ரிக்ட் உத்தரவு

    சில தினங்களுக்கு முன்பு, சமூகவலைதளங்களில் சாதி - மத வன்ம பதிவுகளை பதிவிடுவோரை முளையிலேயே களையெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியிருந்தார்.. அதாவது, அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு சிலர் உருவாக்குகிறார்கள் என்றும், சாதி மோதல்களுக்கும் - மதப் பிரசச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கியமான காரணமாக இருப்பதால், இதை தடுத்தாக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.. ஆனால், "அரசியல்" காரணங்களை மேலோட்டமாக வைத்துக்கொண்டு, கீழ்த்தரமான தகவல்களை பரப்பும் வன்மம் தொடர்ந்து வரும் நிலையில், அதுகுறித்தும் போலீசார் அதிரடியில் குதித்துள்ளனராம்..!

    English summary
    Does cm mk stalin take action against the Senior Officials and What is his next plan திமுகவின் முக்கிய அதிகாரிகள் களையெடுக்க போவதாக கூறப்படுகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X