சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடிமடியிலேயே".. தூள் தூளா போச்சே.. அதிர்ந்த எடப்பாடி.. திகைத்த திமுக.. மிரளும் பாஜக..யாரு ஓபிஎஸ்ஸா

: எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான கொங்குவில் ஓபிஎஸ் புது முயற்சி எடுப்பதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்து என்ன செய்வது என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் இறங்கி உள்ள நிலையில், ஓபிஎஸ் அடுத்தடுத்த வியூகங்களை கையில் எடுத்து விட்டாராம்..!!!

இரட்டை தலைமையுடன் கட்சியை நடத்துங்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டால் என்னாவது? இதுவரை மேற்கொண்ட எல்லா முயற்சிகளுமே வீணாகிவிடுமே என்ற கலக்கமும் எடப்பாடியை சூழ்ந்துள்ளது.

கையில் உள்ள மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் பலத்தை கொண்டே பல கணக்குகளை எடப்பாடி போட்டு வைத்திருந்தாராம்..

சதா குடிச்சிட்டு சண்டை.. ஓயாம தொல்லை வேறு.. அதான் சோத்துல விஷம் வெச்சி கொன்னுட்டேன்.. மனைவி பகீர் சதா குடிச்சிட்டு சண்டை.. ஓயாம தொல்லை வேறு.. அதான் சோத்துல விஷம் வெச்சி கொன்னுட்டேன்.. மனைவி பகீர்

 கரிசனம் + அறுவடை

கரிசனம் + அறுவடை

ஆனால், எவ்வளவு மெஜாரிட்டி ஆதரவை பெற்றிருந்தாலும், அவைகளை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்ற உத்தரவும் எடப்பாடி பழனிசாமியை நிலைகுலைய செய்துவிட்டதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி டீமில் இருந்து சில மூத்த தலைகள், ஓபிஎஸ்ஸுக்கு கரிசனம் காட்ட தொடங்கி உள்ளனர்.. இந்த கரிசன புள்ளிகளை, ஓபிஎஸ் தன்பக்கம் இழுத்து கொண்டு வர தூண்டில் போட்டுள்ளாராம்.. இதைதவிர வேறு சில அரசியல் கணக்குகளை ஓபிஎஸ், புதிய முயற்சியாக கையில் எடுத்து வருவதாக சொல்கிறார்கள்..

 சாணக்கியன்

சாணக்கியன்

இதற்கு அடிப்படை காரணம் சாட்சாத் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என்கிறார்கள். இத்தனை நாளும், தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாக இருந்தது வைத்திலிங்கம்தான்.. எடப்பாடிக்கு எதிரான ஓபிஎஸ்ஸுக்கு எல்லாவிதமான அரசியல் ஐடியாக்களை சொல்லி தந்ததும் வைத்திலிங்கம்தான்.. எடப்பாடி பொதுக்குழு கூட்டிய தினத்தன்று, அதிமுக தலைமை கழகத்துக்கு கிளம்பி போவோம் என்று ஓபிஎஸ்ஸை கிளப்பி கூட்டிவந்ததும் வைத்திலிங்கம்தானாம்.. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் சாணக்கியரான பண்ருட்டியாரின் ஆதரவையும், அட்வைஸையும் ஓபிஎஸ் முன்வந்து கேட்க தொடங்கிவிட்டாராம்.

 ப்ளான் 1

ப்ளான் 1

அதன்படி, முதல்செக் கொங்கு மண்டலத்தில் வீசப்படுகிறதாம்.. காரணம் கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பிரித்ததில் மட்டுமல்லாமல் ஆட்சியையே இழக்க காரணமாகவும் இருந்தது டிடிவி தினகரன் + சீமானும்தான்.. திமுக, பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்ததும் பெரும்பாலும் இவர்கள்தான்.. இந்தமுறையும் தமிழ்தேசிய அரசியலை வைத்து, அதிமுகவின் தேவேந்திர குல வேளாளர் + செங்குந்தர் + யாதவர் + முத்தரையர் போன்ற கணிசமான வாக்குகளை சீமான் அள்ளவும் பிளான் செய்து வருகிறார். இதைதான் நொறுக்கி தள்ள ஓபிஎஸ் கணக்கு போடுகிறார்..

 ப்ளான் 2

ப்ளான் 2

அதேசமயம், கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத பிற ஓட்டுக்களை ஓபிஎஸ் குறி வைத்துள்ளாராம்.. காரணம், கவுண்டர் சமுதாயத்தின் வாக்குகளை அள்ளவே, திமுக + எடப்பாடி + பாஜக போன்ற கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.. எனவேதான், கவுண்டர் சமுதாயம் அல்லாத பிற சமுதாய மக்களை ஈர்க்க, ஓபிஎஸ் புது முயற்சி எடுக்க போகிறாராம்.. வன்னிய முகமான பண்ருட்டியாரின், அடுத்தக்கட்ட அரசியர் நகர்வும், இந்த கொங்கு அல்லாத பிற சமுதாய ஓட்டுக்களை நோக்கியே போவதாக சொல்கிறார்கள்..

 சாய்ஸ், சான்ஸ்

சாய்ஸ், சான்ஸ்

இதுவரை கொங்குவில் ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன.. அந்தவகையில், பண்ருட்டியாரை வைத்து போடும் கணக்க, ஓபிஎஸ்ஸுக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை.. ஏற்கனவே, வன்னியர்களுக்கு எதிரானவர் என்ற பிம்பம் ஓபிஎஸ் மீது படிந்துள்ளதால்தான், பண்ருட்டியாரை தன்பக்கம் அழைத்து வர வேண்டியதாயிற்று.. இப்போது இதே பண்ருட்டியாரை வைத்து, கொங்கு அல்லாத சமுதாயத்தோருக்கு போடப்படும் கொக்கி, எடப்பாடியை கலங்க செய்து வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, திமுக, பாஜகவும் இதை உற்றுநோக்க தொடங்கி உள்ளனவாம்..!

English summary
Does OPS start a new political account in Kongu Region and Will Panruti Ramachandran Plan be successful
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X