சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழை பழத்திற்கு கலர் பூசி செவ்வாழையாக்க முடியுமா? தீயாய் பரவும் வீடியோ.. அதிகாரி விளக்கம் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாழைப் பழம் தொடா்பாக இணைய வெளியில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா.

செவ்வாழைப் பழங்களில் ரசாயன மோசடி என்னும் செய்திகள் இணையத்தில் தொடா்ந்து வலம் வருகின்றன. பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளை விழிப்புணா்வுச் செய்திகளாகக் கருதி அதிகமும் பகிா்ந்து வருகிறாா்கள். இவற்றில் வாழைப் பழங்களை விரைவில் பழுக்கச் செய்ய சிலவித ரசாயனங்களை அதன் மேல் தெளிக்கிறாா்கள் என்பது உண்மைதான். அதற்கான விழிப்புணா்வு மக்களுக்குத் தேவைதான்.

Dont believe rumour on red banana, says officials

ஆனால், செவ்வாழைப் பழங்களைப் பொருத்தவரை இணையத்தில் வலம் வரும் குறிப்பிட்ட அந்தக் காணொலியானது தவறான புரிதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதை யாரும் நம்பவோ, அது குறித்து அச்சம் கொள்ளவோ தேவையில்லை என்கிறாா் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா.

விழிப்புணா்வுச் செய்தியென பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் செவ்வாழைப் பழ விற்பனையில் நடக்கும் மோசடி என்ற தலைப்பில் பகிரப்பட்டது ஒரு தகவல். சோப்பு தண்ணீர் மற்றும் இரும்பை கொண்டு செவ்வாழை தோலை சுரண்டுவதை போலவும், அப்போது அது பச்சை தோலாக மாறுவது போலவும் வீடியோக்கள் காணப்பட்டன. எனவே, வண்ணம் பூசப்பட்டு செவ்வாழை பழங்கள் போல இவை போலியாக மாற்றம் செய்யப்பட்ட சாதாரண வாழைப் பழங்கள் என அந்த வீடியோக்கள் தெரிவித்தன.

Dont believe rumour on red banana, says officials

இந்தச் செய்தி குறித்து திருச்சி மாவட்டம் தாயனூா் அருகேயுள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தைத் தொடா்பு கொண்டு கேட்டோம்.

இதுதொடா்பாக தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா கூறியது: இணையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது செவ்வாழைதான். ஆனால், அதில் சாயம் ஏதும் பூசப்படவில்லை. சிவப்புச் சாயம் பூசியிருந்தால் கழுவிய தண்ணீா் சிவப்பாக மாறியிருக்க வேண்டும். செவ்வாழை முதிா்ந்து பழுக்கும்போது ஆந்தோசயனின் (சிவப்பு நிறமி) தோலின் மேலடுக்கில் மட்டும்தான் உற்பத்தியாகிறது. இவ்வாறு சுரண்டி எடுக்கும்போது உட்புறத்திலுள்ள மஞ்சள் திசுக்கள் வெளிப்படுகின்றன.

விருது மேல் விருதை குவிக்கும் எஸ்.பி.வேலுமணி... உள்ளாட்சித்துறைக்கு 31 தேசிய விருதுகள் விருது மேல் விருதை குவிக்கும் எஸ்.பி.வேலுமணி... உள்ளாட்சித்துறைக்கு 31 தேசிய விருதுகள்

மேலும் சோப்பிலுள்ள சோடியமோ அல்லது பொட்டாசியமோ சிவப்பு நிற ஆந்தோசயனின் நிறமியுடன் வினைபுரிந்து அதை வெளுக்கச் செய்து விடுகிறது. இதனால் பழுக்காதவற்றில் இளம்பச்சை நிறமும் பழுத்திருந்தால் மஞ்சள் நிறமும் வெளிப்படுகிறது. எனவே, இணையத்தில் வரும் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகளால் மக்கள் குழப்பம் அடைவதுடன் விவசாயிகளும் பெரும் பாதிப்படைகிறாா்கள்.

செவ்வாழைப்பழ விஷயத்தில் இனிமேலும் வதந்திகளை நம்ப வேண்டியதில்லை. செவ்வாழையை விரும்பி உண்டு வந்தவா்களும் வதந்தி பயத்தால் தவிா்த்துவிட வேண்டியதில்லை. வதந்தியின் பின்னணி குறித்து இதுவரையிலும் ஆதாரத் தகவல்கள் கிடைக்கவில்லை. செவ்வாழைப் பழங்களைப் பொருத்தவரை சாயம் பூசி விற்பனை செய்வதென்பது மிகவும் செலவான செயல். எனவே, வதந்திகளை பொதுமக்களோ, விவசாயிகளோ நம்ப வேண்டாம் இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Don't believe rumour on red banana which is going viral in social media, says national banana research centre director Uma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X