சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கடற்கரை போர் தண்ணீர் சுத்தமில்லை : எச்சரிக்கும் மெட்ரோ நிர்வாகம் -வீடியோ

    சென்னை: சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்கள் மெரினாவில் உள்ள கை பம்புகளில் தண்ணீரை பிடித்து தங்களது குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால் இந்த தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கு அற்றவை என மெட்ரோ வாட்டர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    சென்னையில் நல்ல காலத்திலேயே தண்ணீர் லாரிகள் எப்படா வரும் என குப்பத்து மக்கள் காத்துகிடப்பார்கள். அப்படி ஒரு சூழல் நிலவும் நிலையில் மெரினா கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக எந்தமாதிரியான கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள் என்பதை எந்த அரசியல்கள் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.

    ஆனால் இயற்கை அவர்களை கைவிடவில்லை. பொதுவாக கடல் நீர் தன்மையாக இருந்தாலும் கடற்கரையோரம் பூமிக்கு அடியில் இருக்கும் தண்ணீர் நன்னீராகவே இருக்கும். மேலும் கடற்கரையோம் 15 அடி ஆழம் வரை நல்ல தண்ணீர் இருக்கும். அதற்கு மேல் உப்பு தண்ணீர் தான் கிடைக்கும். இதனிடையே மெரினா பீச்சில் சுமார் 6 இடங்களில் போர்வெல் அமைத்து கை பம்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெல் தண்ணீர் தான் நொச்சி குப்பம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதி குடிசைவாசிகள் குடிநீராக இப்போது உள்ளது.

    100 பேர் குவிந்து கிடக்கிறார்கள்

    100 பேர் குவிந்து கிடக்கிறார்கள்

    இந்த தண்ணீரை பிடிப்பதற்காக 5கடந்த இரண்டு வாரங்களாக மெரினாக கடற்கரை கை பம்புகள் முன்பு குவிந்து அந்த பகுதி மக்கள் குவிந்து கிடக்கிறார்கள்.
    மெரினா கடற்கரை கைபம்புகளில் தண்ணீர் பிடிப்பது ஒன்றும் எளிதான காரியமல்ல. ஏனெனில் இங்கு தான் எந்த நேரமும் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்பதால் எப்போதுமே 50 முதல் 100 பேர் கூட்டமாக குவிந்து கிடக்கிறார்கள். மக்கள் தங்கள் பகுதி ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துச்சென்று தண்ணீரின் குடம் மற்றம் பானைகள் மற்றும் டிரம்முகளில் அடித்து எடுத்துக்கொண்டு வீடுகளில் நிரப்பி தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகிறார்கள்.

    உப்புத்தன்மை இல்லை

    உப்புத்தன்மை இல்லை

    இது தொடர்பாக லைட் ஹவுஸ் பகுதியில் குடியிருக்கும் பெண் ஒருவர் கூறுகையில், இந்த தண்ணீர் மிகவும் சுத்தமாக இருக்கிறது. போர்வெல் தண்ணீரைவிடவும் சுவையாக இருக்கிறது. இதில் உப்புத்தன்மை சுத்தமாக இல்லை. இதனை துணியை வைத்து வடிகட்டி பிடித்து செல்கிறோம் என்றார்.

    குடிக்கவே லாயக்கு இல்லை

    குடிக்கவே லாயக்கு இல்லை

    நொச்சிக்குப்பத்தில் மக்களுக்காக அனுப்பப்டும் மெட்ரோ தண்ணீர் உப்பாக இருப்பதாகவும் குடிக்கவே லாயக்கு இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் மெரினா கைம்பு தண்ணீரை தான் குடிக்க மக்கள் பயன்படுத்துகிறார்களாம். ஆனால் அந்த தண்ணீர் குடிக்க தகுதியற்றவையே என்ற தகவலை பொதுமக்கள் பொய் என மறுக்கிறார்கள்.

    மெட்ரா நிர்வாகம் எச்சரிக்கை

    மெட்ரா நிர்வாகம் எச்சரிக்கை

    இந்நிலையில் மெரினா கடற்கரை போர்வெல்களில் வரும் தண்ணீர் குடிக்க லாயக்கு இல்லாதவை என்றும் இதனை குளிக்கவும், துணி துவைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மெட்ரோ அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். இந்த தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்கள். இது தொடர்பாக மெரினா கடற்கரை பகுதி மக்களுக்கு அறிவுறத்தப்படும் என்றார்கள். இங்கு போர்வெல்களை அமைப்பதற்கு எந்த அனுமதியும் வாங்கவில்லை என தமிநாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

    English summary
    T N Hariharan, managing director of Metrowater, told that the water was tested in Metrowater labs but found not potable. It could be used for washing and bathing. only
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X