சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அனைத்து முதன்மை கல்வி அலுவலங்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.

Dont mention caste in transfer certificate: TN school education department order to schools

அதில் மாற்றுச் சான்றிதழை பள்ளிகளில் இருந்து கைப்பட எழுதி வழங்கத் தேவையில்லை. பள்ளிக் கல்வித்துறையின் எம்எஸ் இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்து, அதனை பின்னர் தரவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையெழுத்துட்டு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்.

 மொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு! மொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு!

அதன்படி வழங்கப்படும் மாற்று சான்றிதழில் மாணவர்களின் சாதியை குறிப்பிட தேவையில்லை. வருவாய்துறை வழங்கும் சாதி சான்றிதழ்தான் இறுதியானது என்பதால் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என புதிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கிறது.

இதனால் எம்எஸ் இணையதளம் மூலம் இனி வழங்கப்படும் மாற்றுசான்றிதழ்களில் சாதியின் பெயர் குறிப்பிடப்படாது என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

English summary
TN school education department order to schools, Don't mention caste in transfer certificate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X