சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என்று வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Recommended Video

    Tasmac will not open before april 14 , says officials

    நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 24ம் தேதியுடன் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 24ம் தேதி மாலை 6மணி உடன் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. அன்று 6 மணி நேரமே மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த 6 மணி நேரத்தில் மட்டும் 211 கோடிக்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

    Dont rely on rumors about tasmac shops: says officials

    இந்நிலையில் நாடு முழுவதும் மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் அடைப்பால் குடிக்க முடியாமல் புலம்பி வருகிறார்கள். கேரளாவில் உச்சகட்டமாக மது அருந்த முடியாததால் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மீண்டும் கடை திறக்க அரசு உத்தரவிடாதா என்று பேராவலில் உள்ளார்கள்.

    வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் அவர்கள் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில பரவிய தகவலால் உற்சாசம் அடைந்தனர். அந்த வாட்ஸ் ஆப் தகவலில் நாளை முதல் தினமும் 2 மணி நேரம் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் 2மணி நேரம் செயல்படும் என சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வதந்தியே. இது போன்ற எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை ஏற்கனவே அரசு அறிவித்தபடி ஏப்ரல் 14ம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளை திறப்பது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

    English summary
    Don't rely on rumors about tasmac shops:, tasmcs will not open before april 14 : says officials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X