சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்.. முதல்வர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமிய சகோதரர்களிடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புகின்றனர் என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் முதல்வர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் இதனால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகினற்ன. முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக இந்த சட்டம் இருப்பதாக அந்த கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன, திமுக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது நாளை 11 கட்சிகள் இணைந்து பிரம்மமாண்ட பேரணியை நடத்த உள்ளன.

தமிழக அரசு உறுதி

தமிழக அரசு உறுதி

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களிடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், எந்த காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொடர்ந்து பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

நம்பாதீங்க

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமிய சகோதரர்களடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறானது ஆகும். இந்த பொய்யான வதந்தியை நம்ப வேண்டாம்.

அதிமுக வலியுறுத்தல்

அதிமுக வலியுறுத்தல்

இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமரிடம், உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நாடாளுமன்றத்திலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி உள்ளது.

எந்த பாதிப்பும் இல்லை

எந்த பாதிப்பும் இல்லை

சிறுபான்மை மக்களுக்கு எக்காலத்திலும் எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பதற்றத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். ‘

English summary
TN CM edappadi palanisamy said that Don't to spread rumors against citizenship act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X