சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் வந்தாலும் டோண்ட் ஃபியர்... வீட்டில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

நிவர் புயல் தாக்கும் மாவட்டங்களில் வசிப்பவர்கள் வீட்டுப்பகுதியில் மின் கம்பிகளுக்கு அருகில் எந்த மரங்களை வைத்திருந்தாலும் அதன் கிளைகளை முழுமையாக வெட்டி விடுவது பாதுகாப்பானது.

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் தாக்கப் போகுது என்று இரு தினங்களாக வானிலை மையம் எச்சரிக்கிறது. 'நிவர்' புயலின் தாக்கம் காஜா புயலை விட கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்க்கலாம்.

வீட்டைச் சுற்றியோ அல்லது தோட்டங்களிலோ உயர்ந்த தேக்கு மற்றும் தென்னை மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை 90% கழித்து விடுவதால் மரங்கள் சாயாமல் பாதுகாக்கலாம்.

Dont fear even if Nivar comes ... Safety measures to do at home

வீட்டுப்பகுதியில் மின் கம்பிகளுக்கு அருகில் எந்த மரங்களை வைத்திருந்தாலும் அதன் கிளைகளை முழுமையாக வெட்டி விடுவது பாதுகாப்பானது.

வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் டேங் வைத்திருந்தால் டேங் முழுவதும் நீர் நிறைந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.. அப்போது காற்று தண்ணீர் டேங்கை அசைக்காது.

வீட்டுக்கு பக்கவாட்டில் காருக்காகவோ அல்லது வேறு தேவைக்கு அஸ்பெஸ்டாஸ் மற்றும் தகர மேற்கூரை கொண்டு ஷெட் அமைத்திருந்தால் அதன் மேற்பகுதியில் உறுதியான கட்டுக்கம்பிகள் அல்லது பெரிய ,நீண்ட குச்சிகளைக்கொண்டு மேற்கூரை அசையாமல் இருக்கும் வண்ணம் கட்டி வைப்பது நல்லது‌..

வீட்டைச்சுற்றிலோ அல்லது வயல் வெளியிலோ வாழை மரம் வளர்ப்போர் அவற்றின் பாதுகாப்பை உறுதிபடுத்த எல்லா பக்கங்களிலும் குச்சிகள் கொண்டு கட்டி வைப்பது பாதுகாப்பானது.

நாம் பயன்படுத்தும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மரத்தடியிலோ அல்லது தற்காலிக ஷெட்டுகளுக்கு அடியில் நிறுத்துவதை தவிர்ப்பது நல்லது.

திமுகவில் இணைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் ... பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின்..!திமுகவில் இணைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் ... பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின்..!

மாடித்தோட்டத்தில் shade net போட்டிருந்தால் ஒருசில நாட்களுக்கு அவிழ்த்து வைத்துவிடுவது பாதுகாப்பானது. மாடித்தோட்டத்தில் உயரமாக வளர்ந்த குறுமரங்கள் ,செடிகள் இருந்தால் அவைகளை பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத்துவது அவற்றை பாதுகாக்க உதவும்.

மாடியில் திறந்த வெளியில் வளர்ப்பு தேனீ பெட்டி வைத்திருந்தால் அப் பெட்டிகளை ஒரு பாதுகாப்பான அறைக்குள் வைப்பது பெட்டியையும்,ஈக்களையும் பாதுகாக்க உதவும்.

English summary
The Meteorological Department has been warning of a typhoon for two days. We can see the precautionary measures to be taken as the impact of 'Nivar' storm is expected to be more severe than Hurricane Kaza. It is best to avoid parking the two-wheelers and four-wheelers we use under trees or under temporary sheds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X