சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பீதியிலிருக்கும் மக்களுக்கு உதவ அசத்தல்.. கூகுளை முந்திய தமிழர்.. செல்போன் ஆப் அறிமுகம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com என்ற வலைத்தளத்தையும் (Web Site),"DoWhistle" ( https://whi.stle.us/android ) செயலியை (APP) ஒரே நாளில் வடிவமைத்து கூகுள் நிறுவனத்தை அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக DoWhistle வலைத்தளம்( Web Site) மற்றும் செயலியை வடிவமைத்த அமெரிக்கா வாழ் இந்தியரான, "ராஜா அப்பாச்சி" (RAJA APPACHI) DoWhistle CEO and FOUNDER சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டியளித்தார்.

DoWhistle app to find coronavirus testing centers

அப்போது ராஜா அப்பாச்சி கூறியதாவது: "கொரோனா வைரஸ்" (Covid-19) தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தங்கள் இடத்தை பகிர்ந்து கொள்வதற்காக www.DoWhistle.com என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம்.

DoWhistle app to find coronavirus testing centers

மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக DoWhistle என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இச்செயலி வாயிலாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா சோதனை மையங்களை கண்டறியலாம் மற்றும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தங்கள் அருகிலுள்ள மையங்களை தொடர்பு கொண்டு மருத்துவ சேவைகள் விரைவாக கிடைக்க வழி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

DoWhistle app to find coronavirus testing centers
DoWhistle app to find coronavirus testing centers

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய சிறப்பு வலைத்தளம் ஒன்றை அமெரிக்கா அரசிற்காக உடனடியாக வடிவமைத்து தர இயலுமா ? என கூகுள் நிறுவனத்திடம் கேட்டு கொண்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும். என்று கேட்டதும். ஆனால் எங்களுடைய நிறுவனம் இந்த வலைத்தளம் மற்றும் செயலியை ஒரே நாளில் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . கூகுள் செய்ய இயலாத காரியத்தை செய்து மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

DoWhistle app to find coronavirus testing centers

கூகுள் போன்ற பயன்பாட்டில் உள்ள தளங்கள் நிலையான வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை சார்ந்தது. எனவே நமது தேடலின் போது கிடைக்கும் தகவல்கள் தற்போதைய நிலவரப்படி கிடைப்பது கடினம். விசில் தளமானது பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது என்ற விவரங்களை தமது தற்போதைய இருப்பிடத்துடன் நேரடியாக பதிவு செய்வதால் தேடலின் போது நமக்கு கிடைக்கும் தகவல்கள் தற்போதைய, துல்லியமான , உண்மையான விவரங்கள் கிடைக்க வழிசெய்கிறது .

DoWhistle app to find coronavirus testing centers

உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்து நடத்துனர், தற்போது 5 இருக்கைகள் காலியாக உள்ள விவரத்தை விசில் செயலி மூலம் அறிவிக்கலாம். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் டூ விசில் செயலி மூலம் பேருந்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை அறிந்து கொள்வதோடு நடத்துனரை தொடர்பு கொண்டு தங்களது இருக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பைக் மெக்கானிக், பெயிண்டர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், பஞ்சர் சர்வீஸ் என எந்த தொழில் சார்ந்தவர்களும் DoWhistle app மூலம் வலம்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள தங்களுக்கு தேவைப்படுகின்ற நபர்களுக்கு சேவையை நிறைவேற்றக் கூடும். ஸ்பா, சலூன், மசாஜ், மளிகை பொருள் கடைகள் போன்ற தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் மந்தமாக நடக்கும் நேரத்தில் DoWhistle மூலம் உடனடி சலுகைகளை அறிவிக்கலாம்.

கொரோனா.. மோடி சொன்ன ஞாயிற்றுக்கிழமை ஐடியா.. அப்படியே காப்பி அடிக்கப்பட்டதா? வெளியான வைரல் வீடியோ!கொரோனா.. மோடி சொன்ன ஞாயிற்றுக்கிழமை ஐடியா.. அப்படியே காப்பி அடிக்கப்பட்டதா? வெளியான வைரல் வீடியோ!

இதை அருகில் உள்ள வாடிக்கையாளர்கள் DoWhistle செயலி மூலம் அறிந்து கொண்டு சலுகைகளை பெற்று பயன்பெறலாம். இதன்மூலம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும். குறைந்த செயல்திறன் கூப்பன் முறையை அகற்றி DoWhistle செயலி மூலம் தொழில் நிறுவனங்களில் வருமானத்தை கணிசமாக உயர்த்தலாம்.

இந்த விசில் தளத்தை பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உறுதுணையாக இருப்பவர்களின் முதன்மையானவர்கள். ரங்கா ஜெயராமன் (Stanford business graduate school associate DEAN/CDO - USA), ஜெய் விஜயன், (Ex,Tesla motors CIO - USA), Prof.கிருஷ்ணன் (MIT Doctorate,Harvard-affiliated faculty - USA) இவ்வாறு தெரவிக்கப்பட்டுள்ளது.

English summary
To help people in fear of coronavirus infection, California-based DoWhistle has designed a website, www.DoWhistle.com, and a "DoWhistle" (https://whi.stle.us/android) processor (APP) overnight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X