• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வன்னியர்களுக்கு தர்மபுரியில் ஒரு தர்ம சங்கட சவால்... 3 வேட்பாளர்கள்... வாக்குகளை அள்ளப் போவது யார்?

|
  அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடாததற்கு காரணம் இதுதானாம்!- வீடியோ

  சென்னை: வன்னியர்களின் பெல்ட்டில் உள்ள தருமபுரி தொகுதியை இந்த முறை அள்ளி கொண்டு வர போகிறார்கள் என்பதுதான் இந்த தேர்தலின் ஹைலைட்டே!

  அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் இங்கு களமிறக்கப்பட்டுள்ளார். சிட்டிங் எம்பி. பழக்கப்பட்ட தொகுதி. குறை என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாத அளவுக்கு அன்புமணி நிறையவே இங்கு செய்திருக்கிறார்.

  இதே தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடுபவர் டாக்டர் செந்தில்குமார். வன்னியர்கள் நிறைந்த தொகுதி என்பதாலோ என்னவோ, , அதே சமூகத்தை சேர்ந்தவரையே திமுக வேட்பாளராக நிறுத்தி உள்ளது. அதேபோல, அமமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால்தான் தருமபுரி ஸ்டார் தொகுதி என்ற கேட்டரிக்குள் வருகிறது.

  காடுவெட்டி குரு

  காடுவெட்டி குரு

  இப்போது அன்புமணி முன் உள்ள பிரச்சனைகள் என்று பார்த்தால், திமுக எதிர் வேட்பாளரும் வன்னியர் என்பதால் ஓட்டுக்கள் நிறையவே பிரிய வாய்ப்புள்ளது. இரண்டாவதாக, காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது செம கடுப்பில் உள்ளனர். அதிருப்தியில் இருந்தால் பரவாயில்லை.. ஆனால் வேல்முருகனுக்கு ஆதரவு தர.. வேல்முருகனோ திமுகவுக்கு ஆதரவு தர.. இதன்மூலமும் பாமக ஓட்டுகள் நிறைய பிரிய சான்ஸ் உள்ளது!

  அன்புமணியின் அரசியல் இப்படித்தான் ஆரம்பித்ததா? சுவாரஸ்ய தகவல்கள்

  அரூர், பாப்பிரெட்டி

  அரூர், பாப்பிரெட்டி

  மூன்றாவதாக, அதிமுகவின் சப்போர்ட் இந்த தொகுதியில் பாமகவுக்கு குறைவாக உள்ளதாம். ஏனெனில் எம்பி தேர்தலை விட அடுத்ததாக தொகுதியைவிட, இடைத்தேர்தல் நடக்க உள்ள அரூர், பாப்பிரெட்டி என்ற இந்த சட்டமன்ற தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதைதவிர திமுகவுக்கென்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.

  புரவி பாய்ச்சலில் அமமுக.. விரட்டும் அதிமுக.. நடுவில் பாயும் திமுக.. அனல் பறக்கும் பெரியகுளம்

  மைனஸ் பாயிண்ட்கள்

  மைனஸ் பாயிண்ட்கள்

  மேலும் புதிய வரவுகளான நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்றவை பக்கமும் மக்களின் கவனம் திசை திரும்பி உள்ளது. இதைதவிர, அதிமுக-பாஜக கூட்டணி மீதான அதிருப்தி, விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வராதது, பாமக கூட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் சர்ச்சை பேச்சுகள்.. என மைனஸ் பாயிண்ட்கள் நிறையவே வரிசையில் நிற்கின்றன.

  உதயநிதி ஸ்டாலின்

  உதயநிதி ஸ்டாலின்

  இவ்வளவு இருந்தாலும் தொகுதிக்கு அன்புமணி செய்த அடிப்படை வளர்ச்சி திட்டங்களை யாராலும் குறை சொல்ல முடியாது. பாராளுமன்றத்துக்கு இந்த தொகுதி எம்பி சரியாக செல்லவில்லை, குறைகளை சொல்லவில்லை என்று பிரச்சாரம் செய்யவந்தபோது உதயநிதி ஸ்டாலின், அன்புமணியை கடுமையாக விமர்சித்துவிட்டு போனார்.

  நல்லுறவு

  நல்லுறவு

  பாராளுமன்றத்தில் இவரது வருகை குறைவாக இருந்தாலும் கூட தொகுதியில் அடிக்கடி விசிட் அடிக்கும் முக்கிய அரசியல் தலைவர் அன்புமணி ஆவார். மக்களுடன் நல்ல உறவை சரியாக பேணி வருகிறார். பெரிய அளவிலான குறைகளை அன்புமணி மேல் தொகுதி மக்களால் சொல்ல முடியாது என்பதால் அன்புமணியை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் அசைக்க முடியாது என்றுதான் தெரிகிறது.

  சாதி ஓட்டுக்கள்

  சாதி ஓட்டுக்கள்

  இருந்தாலும் பணபலம், ஜாதீய வாக்குகள் இவை இரண்டும்தான் எல்லாவற்றையும் தீர்மானித்து தருமபுரி தொகுதி வெற்றியை நிர்ணயிக்க போகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  anbumani ramadoss Vs dr senthil kumar: Read the latest news and in-depth analysis on battle between two candidates Dr Anbumani Ramadoss (PMK) and Dr Senthil Kumar (DMK) contesting from Dharmapuri Lok Sabha Consituency in Tamil Nadu and much more at Tamil Oneindia.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more