சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உணவை விடுங்க.. ஒரு வேளையாவது பழம், காய்கறி மட்டும் சாப்பிடுங்க. கொரோனாவுக்கு "டாட்".. டாக்டர் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு வேளையாவது பழம், காய்கறிகளை உணவாக உட்கொள்ளுங்கள் என டாக்டர் தீபா அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    ஒரு வேளையாவது பழம், காய்கறி மட்டும் சாப்பிடுங்க. கொரோனாவுக்கு 'டாட்'.. டாக்டர் தீபா

    இதுகுறித்து கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அடுத்ததாக சுடுநீரில் கல் உப்பை போட்டு தொண்டை வரை படும்படி கொப்பளிக்க சொல்கிறோம். இதன் மூலம் தொண்டை தொற்றை குறைக்கும். மேலும் கொரோனா வைரஸ் முதலில் தொண்டையில் இருக்கும் என்பதால் இந்த வாய் கொப்பளித்தல் மூலம் அதன் செயல்பாட்டை அங்கேயே குறைத்து விடலாம். அதன் பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் சுடுதண்ணீரை குடிக்க வேண்டும்.

    நம் உடலில் 70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீரால் ஆனது. நீர் சத்து குறையாதபடி அதை பராமரிக்க வேண்டும். கொரோனா நோயாளிகளிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்கள் என கேட்ட போது அவர்களில் 92 சதவீதம் பேர் தண்ணீரே குடிக்காதவர்கள். இவர்கள் விக்கல் எடுக்கும்போதும் சாப்பிடும் போதும் மட்டுமே தண்ணீர் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்கள்.

     சளியின் அடர்த்தியை குறைக்கும் நீராவி தெரபி.. கொரோனாவை தொண்டையிலிருந்து துரத்தும்.. டாக்டர் தீபா சளியின் அடர்த்தியை குறைக்கும் நீராவி தெரபி.. கொரோனாவை தொண்டையிலிருந்து துரத்தும்.. டாக்டர் தீபா

    நோயிலிருந்து மீள்வது

    நோயிலிருந்து மீள்வது

    தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நமது உடல் அதிக அசிட்டிக்காகவே இருக்கும். இதனால் நோய் பாதிப்புகள் ஏற்படும். ஏற்கெனவே நமது உடலில் நச்சுத்தன்மை இருப்பதால் வைரஸ் வரும் போது எனர்ஜி அதாவது ஆற்றல் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. அதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. அதனால் அவர்கள் நோயிலிருந்து மீள்வதும் கடினமாக இருக்கிறது.

    ஒரு வேளை பாஸ்ட்டிங்

    ஒரு வேளை பாஸ்ட்டிங்

    ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய், பிரான்சிட்டல் ஆஸ்துமா,நுரையீரல் நோய் ஆகிய நோயாளிகளுக்கு கொரோனா வந்தால் நம் உடலில் உள்ள டாக்ஸின்கள் வைரஸின் செயல்பாடுகளை அதிகரிக்கும். இந்த நிலையில் நமது உடலை நாம் எப்படி நச்சுத்தன்மை இல்லாதவையாக மாற்றுவது? இதற்கு நாம் ஒரு நாளைக்கு சமைக்காத உணவுகளை உட்கொள்ளவும், அதாவது பழங்கள், முளைக் கட்டிய பயறுகள், ஜூஸ், காய்கறிகளை உண்ண வேண்டும். இது இறந்த செல்களை நம் உடலிலிருந்து நீக்குகிறது.

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    42 மணி நேரம் கழித்து நாம் பார்க்கும்போது நமது உடலில் வெள்ளை அணுக்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுதான் நமது எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த எண்ணிக்கை அதிகரித்தால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தற்போது வீட்டிலிருக்கும் ஒரு வேளையாவது பழங்களையும் காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு நாள் முழுவதும் பழங்கள், காய்கறிகளை உண்ணும் போது கோவிட் 19-க்கு நாம் முற்றுப் புள்ளி வைக்கலாம்.

    மஞ்சள் தூள்

    மஞ்சள் தூள்

    வழக்கமாக நம் உணவில் என்னென்ன சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் பூண்டு, இது வைரஸை எதிர்த்து செயல்படும். மஞ்சளில் உள்ள குர்க்குமின் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களில் மஞ்சள் தூளை அதிகமாக சேர்க்க வேண்டும். இதில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருக்கிறது. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.

    ஜின்ஜரால்

    ஜின்ஜரால்

    அடுத்தது இஞ்சி, இதில் ஜின்ஜரால் இருக்கிறது. இதிலும் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்டது. இவை எல்லாவற்றையும் நம் சமையலில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். அது போல் விட்டமின் சியில் ஏதாவது ஒரு பங்கு எடுக்க வேண்டும். பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். 50 கிராம் நெல்லிக்காய் சாறை எடுத்துக் கொள்ளலாம். துளசியும் 50 கிராம் சாறு, லெமன் ஜூஸ் 5 கிராம், கால் டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    நெல்லியிலும் லெமனிலும் நிறைய பிளேவினாய்டு இருக்கிறது. இவை அழற்சியை தடுக்கிறது. பச்சை இலைகளை கொண்ட காய்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் கெரோட்டின் இருக்கும். இதில் விட்டமின் ஏ இருக்கிறது. இந்த விட்டமின் ஏ நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸுக்கு எதிராக இன்டர்பெரான்களை தூண்டுகிறது. இந்த இன்டர்பெரான்கள் நம் உடலில் எந்த வைரஸ் நுழைந்தாலும் அதை எதிர்த்து போராடி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு, புதினா, துளசி ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம் என்றார் .

    English summary
    Manipulative Therapy HOD Dr Deepa advises to detoxify our body by taking fruits and vegetables.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X