சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா?.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே!.. டாக்டர் ஒய் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏன், வெள்ளைப்படுதலால் என்னென்ன நன்மைகள், அதிக வெள்ளைப்படுதலுக்கு தீர்வு என்ன உள்ளிட்டவை குறித்து அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் ஒய் தீபா விளக்குகிறார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் இன்று நாம் பார்க்க இருக்கும் டாபிக் வெள்ளைப்படுதல் (Leukorrhea). பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை நிறத்தில் பிசுபிசுவென வெளியாகும். இதில் லேசான வாசனை வரும்.

இது பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வரக் கூடிய விஷயம்தான். இது எதற்காக பயன்படுகிறது என்றால், பாக்டீரியாக்களை பிறப்புறுப்பின் உள்ளே வரவிடாமல் பாதுகாக்க உதவுகிறது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பை தரக் கூடிய கழிவுகள் இருந்தால் அதையும் வெளியேற்ற இது பயன்படுகிறது.

துர்நாற்றம்

துர்நாற்றம்

இது நன்றாக வெள்ளை நிறத்தில் இருக்கும். பொதுவாக இதில் துர்நாற்றம் வீசாது. ஆனால் உடலில் ஏதேனும் பிரச்சினை என வந்துவிட்டால் இதிலிருந்து துர்நாற்றம் வீசும். பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்பும் பின்பும் வெள்ளைப்படுதல் ஏற்படும். உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் இந்த வெள்ளைப்படுதலின் நிறம் மாறிவிடும். நீல நிறத்திலோ அல்லது பச்சை அல்லது பிரவுன் அல்லது மஞ்சள் நிறத்திலோ ஆகலாம். இந்த வெள்ளைப்படுதலே அமிலத் தன்மை கொண்டதுதான். அதனால் தான் வெள்ளையணுக்கள் பிறப்புறுப்பு வழியாக வெளியேறுகிறது. மாதவிடாய் போல் வெள்ளைப்படுதலும் நிறைய போய் கொண்டே இருந்தால் அது கவனிக்க வேண்டிய விஷயமாகும். இது ஏன் என்றால் பெண்களுக்கு மாதவிடாய்க்கு காரணமான ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல்

அதில் ஈஸ்ட்ரோஜன் சரியான நிலையில் இல்லாவிட்டால் நம் உடலில் தொற்று ஏற்படுகிறது. இதனால்தான் வெள்ளைப்படுதலும் ஏற்படுகிறது. பாலியல் நோய்கள் வந்தால் இது போன்ற வெள்ளைப்படுதலை நாம் அதிகமாக பார்க்கலாம். இந்த வெள்ளைப்படுதலுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் என்ன தீர்வு என்பதை பார்க்க போகிறோம். முதலில் வெந்தயம் குறித்து பார்ப்போம். இதில் கரையக் கூடிய நார்ச்சத்து பொருட்கள் உள்ளன. இதில் உள்ள மியூகஸ் மெம்பிரேன் நல்ல இதமான செயலை தரும். வெள்ளைப்படுதலால் ஏற்படக் கூடிய வீக்கம், எரிச்சல், வலி ஆகியவற்றை சரி செய்யும். இந்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும்.

நோய் தொற்று

நோய் தொற்று

காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து இதை உண்ணலாம். உடல் சூட்டை தணிப்பதோடு இந்த நோய் தொற்றை எதிர்த்தும் போராடும். அடுத்தது கொய்யா இலையை எடுத்துக் கொள்ளலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் கொய்யா இலைகளை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இது வெதுவெதுப்பாக ஆனவுடன் பிறப்புறுப்பை இந்த நீரை கொண்டு சுத்தம் செய்யலாம். காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்யலாம்.

நச்சுகள்

நச்சுகள்

10 கிராம் தனியா எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரவு 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்துவிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை நாம் குடிக்கலாம். இதனால் நம் உடலில் உள்ள நச்சுகள் முழுவதும் வெளியேறிவிடும். அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஈஸ்ட்ரோஜனுடைய அளவை சரி செய்ய இந்த தனியா உதவுகிறது. அடுத்தது கற்றாழை - இதன் ஜெல்லிற்கு நல்ல கூலிங் தன்மை உள்ளது. இது உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கர்ப்பப்பையை நன்றாக வலுப்படுத்தி அதிலிருந்து எந்த அளவுக்கு அதிகமான வெள்ளைப்படுதலை உண்டாக்காமல் தடுக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த கற்றாழையை மோருடன் கலந்து கொடுக்கலாம்.

தேங்காய்

தேங்காய்

இந்த ஜெல்லை தேங்காய், பனங்கற்கண்டு, ஏலக்காய் போட்டு தினமும் குடித்து வர வந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படாது. அடுத்தது வேப்ப இலையின் சாறு, அல்லது மரப்பட்டையின் சாற்றை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் சீரகத்தையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு தினமும் எடுத்துக் கொள்ளலாம். வேப்ப இலை ஹார்மோன் அளவை மெயின்டெய்ன் செய்கிறது. சாதம் வடிக்கும் கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வெள்ளைப்படுதலை சரி செய்து விடலாம். இந்த கஞ்சி தண்ணீருடன் நாகப்பழத்தின் கொட்டையை காயவைத்து அரைத்து ஒரு டம்ளர் கஞ்சி தண்ணீரில் கால் ஸ்பூன் நாகப்பழக் கொட்டை பொடியை போட்டு குடிக்கலாம். அடுத்தது வெண்டைக்காய், இதில் பினோலிக் என்ற ஒரு பொருள் இருக்கிறது.

மிளகுத் தூள்

மிளகுத் தூள்

இதை நன்றாக டிகாக்ஷன் போல் போட்டு குடிக்கலாம். அத்திமரத்தின் பட்டை, ஆலமரத்தின் பட்டை ஆகியவற்றை எடுத்து நன்கு கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியவுடன் பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம். அந்த நீரை குடிக்கவும் செய்யலாம். வெள்ளை பூசணியும் சிறந்த மருந்துதான். இதை தண்ணீர் விட்டு அரைத்து லேசாக மிளகுத் தூள் போட்டு எடுக்கலாம். இதை 11 மணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

பட்டை பொடி

பட்டை பொடி

இதை நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் போது நம் உடல் அல்கலைனாக மெயின்டெய்ன் ஆகிறது. இதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு பட்டையின் பொடியையும் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் டம்ளர் அளவுக்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரத்தில் கடுக்காயை நீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் பிறப்புறுப்பை வாஷ் செய்யலாம். ஒரு அரை டம்ளர் அளவுக்கு உள்ளுக்கும் குடிக்கலாம்.

பிறப்புறுப்பு தூய்மை

பிறப்புறுப்பு தூய்மை

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்து கொள்ளலாம். இதில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. பிறப்புறுப்பை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அந்த பகுதியில் இருக்கும் ரோமங்களை நீக்க வேண்டும். உள்ளாடைகளையும் காட்டனாக அணிந்து அதை துவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும். சூரிய கதிரில் ஒரு பக்கெட் நீரில் மஞ்சளை கலந்து வைத்து விட வேண்டும். மாலை நேரத்தில் அந்த தண்ணீர் மூலமாக நாம் பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம். இடுப்பு குளியல் செய்யலாம். சக்திபந்தாசனம் , நாடி சுத்தி பிராணயாமம் செய்வதால் கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தரும். உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும் . இதனுடன் அரோமா எண்ணெய்கள் மூலம் மசாஜ் கொடுக்கலாம். வயிறு பகுதி, இடுப்பு பகுதிகளில் மசாஜ் செய்யலாம். இதனால் கர்ப்பப்பை வலுவடையும். குறிப்பாக ரோஸ்மேரி ஆயில், சாண்டல்வுட் ஆயில் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.

எந்த உணவை தவிர்க்க வேண்டும்?

எந்த உணவை தவிர்க்க வேண்டும்?

வெள்ளைப்படுதல் பிரச்சினை இருப்போர் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பொருட்களை தவிர்க்க வேண்டும். மைதா, டீ, காபி, மசாலா, வெளி உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தண்ணீர் கண்டிப்பாக மூன்றரை லிட்டர் குடிக்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் தலையில் நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய்யை தேய்த்து வெயிலில் அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு குளிப்பதால் உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறும், உஷ்ணமும் சரியாகும் என்றார் டாக்டர் தீபா.

English summary
Government Yoga and Naturopathy hospital Manipulative Therapy HOD Dr Y Deepa says about Leukorrhea and how to stop this?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X