சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூப்பெய்திய பெண்களுக்கு இதெல்லாம் செஞ்சு கொடுங்க.. ரொம்ப நல்லது.. டாக்டர் தீபாவின் ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: பூப்படையும் பெண்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை செய்து கொடுக்கலாம் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பூப்படைந்த பெண்கள் என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், என்ன மாதிரியான யோக பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

இது போன்ற நேரத்தில் குழந்தைகளுக்கு மன ரீதியிலாகவும் உடல் ரீதியிலாகவும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். உடல்ரீதியாக வரக் கூடிய மாற்றங்களை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும். மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும்.

தமிழகம் உள்பட 5 முன்னணி மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் லிஸ்ட்தமிழகம் உள்பட 5 முன்னணி மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் லிஸ்ட்

நாப்கின்

நாப்கின்

மாதவிடாய் காலத்தில் நாப்கினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விட எப்படி அதை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நாம் சொல்லி தர வேண்டும். குழந்தைகளின் மாதவிடாய் சுகாதாரத்தை சுத்தமாக வைத்திருப்பதை போல் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.

நாப்கின்

நாப்கின்

எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் நாப்கின்களை மாற்ற வேண்டும். பிறப்புறுப்புகளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு தாய்மார்களாகிய நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது போல் உடல்ரீதியிலான மாற்றங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

பராமரிக்க

பராமரிக்க

இதெல்லாம் ஒன்று இல்லை. சாதாரணமான மாற்றங்கள்தான். உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை போன்றதுதான் இந்த மாற்றங்கள் என்பதை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு கொடுக்கக் கூடிய உணவுகள் அவர்களுக்கு பிற்காலத்தில் உடல்நலனை பராமரிக்க உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ஹார்மோன்கள் சுரத்தல்

ஹார்மோன்கள் சுரத்தல்

இந்த நேரத்தில்தான் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. அவர்களுக்கு கால்சியம் சத்துகள், இரும்பு சத்துகளை அதிகமாக கொடுக்கும் போது ஈஸ்ட்ரோஜன், புரஜஸ்டிரான் என்ற ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும். சிகப்பு அரிசியை கொடுக்கலாம். இதில் இரும்பு சத்துகள் அதிகமாக இருக்கிறது. விட்டமின்களும் உள்ளன. ஜிங்க் மற்றும் நார்சத்துகளும் அதிகமாகவே இருக்கிறது.

சத்துகள்

சத்துகள்

பூப்படைந்த முதல் 3 நாட்கள் நாம் தர வேண்டியது என்னவென்றால் வேப்பங்கொழுந்தும் மஞ்சளும்தான். இந்த இரண்டையும் அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவுக்கு மூன்று நாள்களும் தர வேண்டும். உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறவும், தொற்றுகள் ஏற்படாமலும் உடலை சுத்தப்படுத்த இந்த உருண்டை மிகவும் உதவும். இவர்களுக்கு நாம் 3 சத்துகளை நிச்சயம் கொடுத்தாக வேண்டும்.

புரதச் சத்து

புரதச் சத்து

இரும்பு சத்து, கால்சியம் சத்து, புரத சத்து ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. இந்த மூன்றையும் நாம் சம அளவில் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எள்ளையும் பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்கலாம். இதை முதல் இரு தினங்கள் கொடுக்கலாம். ஒரு வேளை ரத்த போக்கு அதிகமாக இருந்தால் அதை நிறுத்திவிடலாம். எள்ளுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து நாம் தரும்போது இதில் இருக்கக் கூடிய ஜின்க், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை நாம் கொடுத்தால் அதிக ரத்த போக்கை சீர் செய்ய இது உதவுகிறது.

வறுத்த எள்

வறுத்த எள்

இந்த பனை வெல்லத்தை காய்ச்சி வறுத்த எள்ளுடன் உருண்டை செய்து கொடுக்கலாம். ஒரு சில குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். அந்த சமயத்தில் கற்றாழையை நாம் தர வேண்டும். கற்றாழையில் உள்ள ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு பனை வெல்லத்துடன் சேர்த்து நாம் மோர் போல் அடித்து தரலாம். மோருடன் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து கொடுக்கலாம்.

ரத்த போக்கு

ரத்த போக்கு

இதை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைந்து சீரான ரத்த போக்கு ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும். இது அதிகரித்தால் சிறுநீர் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதை சரி செய்ய முள்ளங்கி, சுரக்காய், வெள்ளை பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இதன் மூலம் வெள்ளைப்படுதல் இல்லாமல் உடல் உஷ்ணம் குறைந்து சீரான ஹார்மோன் பேலன்ஜை தக்க வைத்துக் கொள்ள உதவும் என்றார் டாக்டர் தீபா.

English summary
Government Yoga and Naturopathy Doctor Y. Deepa says that what are the healthy foods given to Puberty attained girls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X