சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதட்டுக்கும் தாடைக்கும் இடையே அதக்கி வைக்கும் இனிப்பு புகையிலை தலையணை! டாக்டர் பரூக் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் கூடிய புகையிலையை மாணவர்கள் பயன்படுத்தும் தலையணை போன்ற பைகளை பயன்படுத்த தொடங்கினால் அடுத்து சிகரெட், பீடா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பதால் இதுகுறித்து பள்ளி மாணவர்களளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இது தான் கூல் லிப். இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது.

உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். ஒரு சின்ன ஹை கிடைக்கிறது.

சிக்கன், மட்டன் சாப்பிடாதவர்களுக்கும் கொலஸ்டிரால் வருவது ஏன்.. ஃபேட் நல்லதா கெட்டதா? டாக்டர் பரூக் சிக்கன், மட்டன் சாப்பிடாதவர்களுக்கும் கொலஸ்டிரால் வருவது ஏன்.. ஃபேட் நல்லதா கெட்டதா? டாக்டர் பரூக்

வஸ்து

வஸ்து

இந்த போதை வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது . புகையிலை = நிகோடின், இது ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல போதை வஸ்துக்களுக்கும் பழக்கம் உண்டாக்கி விடக்கூடும்.

தமிழகம்

தமிழகம்

தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளிடையே 3021 பேரிடம் ஆய்வு செய்ததில் 23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டில் கல்வி பயில செல்லும் பிள்ளைகள்

வீட்டில் கல்வி பயில செல்லும் பிள்ளைகள்

நம் வீட்டில் கல்வி பயிலச் செல்லும் செல்வங்களின் புத்தகப்பைகளில் கால்சட்டை கை சட்டைகளின் பைகளில் இது போன்ற விசயங்கள் கிடைத்தால் இது வரை தாங்கள் சாக்லெட் என்று நினைத்திருக்கக் கூடும். இனி இவற்றைப் பார்த்தால் கட்டாயம் நம் செல்வங்களுக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை. கண்டிப்பாக அடி உதை உதவாது.

ஒவ்வாமை

ஒவ்வாமை

அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும். உங்களின் குடும்ப நல மருத்துவரிடம்/ குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுக்கக் கூறுங்கள் - தேவைப்பட்டால் கட்டாயம் மன நல மருத்துவரின் அறிவுரை மற்றும் கவுன்சிலிங்குக்கு பரிந்துரைக்கப்படும். அன்பினால் ஆகாதது எதுவுமில்லை. நம்மை சுற்றி இருப்பதை கிடைப்பதை நாம் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 தடை செய்வது

தடை செய்வது

இதை தடை செய்வது குறித்தும் அரசு முடிவெடுப்பது நல்லது பள்ளிகளில் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறுவது பலனைத் தரக் கூடும். எனவே தான் இது போன்ற சிறிய க்விஸ்கள் மூலம் தெரிவிக்கலாம் என்ற எண்ணம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

English summary
Sivagangai Government hospital Dr Farook Abdulla gives awareness about sweetness tobacco.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X