சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்க்கரை நோயால் ஏற்படும் பக்கவிளைவுகளால் அவதியா?.. கவலையை விடுங்க.. டாக்டர் கவுதமன்

Google Oneindia Tamil News

சென்னை: சர்க்கரை நோயினால் உடலில் ஏற்படுகிற எல்லாவிதமான பக்க விளைவுகளையும் கட்டுப்படுத்தும் கசாயம் குறித்து ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கவுதமன் கூறியுள்ளார்.

Recommended Video

    சர்க்கரை நோயால் அவதியா ? ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் கூறும் அருமருந்து - வீடியோ

    இதுகுறித்து டாக்டர் கவுதமன் தமிழ் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ஜாதிபத்ரி கசாயம் என்பது சர்க்கரை நோயினால் உடலில் ஏற்படுகிற எல்லாவிதமான பக்க விளைவுகளுக்கும் அருமருந்தாகும். சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு புறம் நடந்து வருகிறது.

    சர்க்கரை நோயினால் ஏற்படுகிற பக்கவிளைவுகளை குறைப்பதற்கான முயற்சிகள் என்ற ஒன்று உள்ளது. இன்றைக்கு என்னதான் நவீன மருத்துவம் முழுவதும் வளர்ந்திருக்கக் கூடிய மருத்துவமாக நம்பப்பட்டாலும் கூட, சர்க்கரை நோய் ஒரு மேக நோய் என வரும்போது அதிலிருந்து பக்கவிளைவுகளை தவிர்க்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஜி.எஸ்.டி. இழப்பீடு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அமைதி காக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி. இழப்பீடு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அமைதி காக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின்

    10 ஆண்டுகள்

    10 ஆண்டுகள்

    5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சர்க்கரை நோயினால் நாம் அவதிப்படும் போது எடுக்கக் கூடிய மாத்திரையின் அளவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு கவலைக்குரிய விஷயம் சர்க்கரையினால் ஏற்படுகிற நரம்பு பாதிப்புதான். அதனால் கை, கால்களில் ஏற்படுகிற எரிச்சல், மறத்து போதல், கண்களில் ஏற்படுகிற பாதிப்புகள், இதய பாதிப்புகள், ரத்தக் குழாய்களில் ஏற்டுகிற பாதிப்புகள், உடலில் ஏற்படுகிற தேவையற்ற அரிப்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.

    சர்க்கரையை கட்டுப்படுத்த

    சர்க்கரையை கட்டுப்படுத்த

    சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்படுத்தாமல் விடும் போது உடல் வெளிப்படுத்துகிற முதல் அறிகுறியே உடலில் தேவையில்லாமல் ஆங்காங்கே ஏற்படும் அரிப்புகள். இவ்வாறு அரிப்பு ஏற்படும் போது தோல் மருத்துவரை போய் சந்திப்பார்கள். ஆனால் சர்க்கரை நோய் குறித்து கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். சர்க்கரை நோயை 200 க்குள் 180 க்குள் கொண்டு வரக் கூடிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    அதீத சர்க்கரை

    அதீத சர்க்கரை

    இது போல் பக்கவிளைவுகளை குறைப்பதற்கான முயற்சிகள் என வரும்போது நேரிடையாக சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எந்த மருத்துவ முறையை நாம் பின்பற்றிக் கொண்டிருந்தாலும் கூட, இந்த ஜாதிபத்ரியின் கசாயத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்போது சர்க்கரை நோயினுடைய பக்கவிளைவுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். அதீத சர்க்கரையினால் ஏற்படுகிற அரிப்புகளை கூட இந்த கசாயத்தை பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    தேவையான பொருட்கள்

    இந்த கசாயம் செய்ய தேவையான பொருட்கள்
    பரங்கிப்பேட்டை

    • நீரடி முத்து பருப்பு
    • கடுக்காய்த்தோல்
    • அமுக்கிரா வேர்
    • சாதிக்காய்
    • சாதிப்பத்திரி
    • கிராம்பு
    100 மில்லி

    100 மில்லி

    இந்த பொருட்களை ஒவ்வொன்றும் 2 கிராம் எடுத்துக் கொண்டு 300 மில்லி தண்ணீரில் கலந்து அதை 100 மில்லியாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். காலை ஒரு முறை, இரவு ஒரு முறை உணவுக்கு முன்னர் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோயும் குறையும். பக்க விளைவுகளும் குறையும். சர்க்கரை நோய் அதிகமாகும் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகிற பிரச்சினை என்னவெனில் பிறப்புறுப்பில் கடுமையான அரிப்புகளும் ஏற்படும். ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏகப்பட்ட புண்களும், வெடிப்புகளும் சீழ்களும், சிறுநீர் கழிக்கும்போது கடுமையான எரிச்சலும் ஏற்படும். இதை சிலர் சிறுநீர் மண்டல தொற்று என நினைப்பர். இதற்கான பரிசோதனைகளை செய்து பார்ப்போம். ஆனால் தொற்று இல்லை என்பார்கள்.

    மேக ஊறல்

    மேக ஊறல்

    சிறுநீர் மண்டலத்தில் ஏற்படக் கூடிய எரிச்சல், வலி, அரிப்பு மற்றும் சிறுநீர் கழித்த பிறகு ஏற்படும் சொல்ல முடியாத வேதனை ஆகியவற்றை இந்த கசாயம் நீக்கும். தினமும் காலை, இரவு வேளைகளில் 100 மில்லி கசாயத்தை எடுத்துக் கொண்டால் உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறும். சர்க்கரை நோயினால் ஏற்படக் கூடிய சிறுநீர் தொற்றுகள், தொற்றுகளை போலவே தோற்றமளிக்கும் தொந்தரவுகள் இந்த கசாயத்தால் குறைந்து கொண்டே வருவதை நாம் காணலாம். இந்த கசாயம் மேக ஊறலையும் குறைக்கும் என்றார்.

    English summary
    Varma Ayurveda Hospital Dr Gowthaman says a dicoction which gives relief to Diabetic related side effects.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X