சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலையில் எழுந்தால் கக்கா போக கஷ்டமா.. 3 விஷயத்தை பாலோ செய்ங்க.. சுலபமா வந்துடும்.. டாக்டர் கவுதமன்

Google Oneindia Tamil News

சென்னை: மலச்சிக்கலை சுலபமாக தீர்க்க தேவையான விஷயங்களை ஆயுர்வேத டாக்டர் கவுதமன் விளக்குகிறார்.

Recommended Video

    காலையில் எழுந்தால் கக்கா போக கஷ்டமா.. 3 விஷயத்தை பாலோ செய்ங்க.. சுலபமா வந்துடும்.. டாக்டர் கவுதமன் - வீடியோ

    இதுகுறித்து டாக்டர் கவுதமன் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பேட்டியில் காலையில் எழுந்தவுடன் சிறுநீராக இருந்தாலும் சரி மலமாக இருந்தாலும் சரி அவற்றை எவ்வாறு முறையாக வெளியேற்றுவது என்பதை பார்ப்போம்.

    இதை மூன்று வகையாக செய்யலாம். ஒன்று உடற்பயிற்சி, இரண்டாவது உணவு முறை. இவை இரண்டையும் செய்ய நேரமில்லாத நிலையில் மூன்றாவது இரவு படுக்கும் முன் மலமிளக்கிகளை இயற்கையாகவே உண்பது.

    சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் பரவியதா கொரோனா?சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் பரவியதா கொரோனா?

    கழிவுகள்

    கழிவுகள்

    உடற்பயிற்சி என்பது இது போன்ற கழிவுகளை வெளியேற்ற முக்கியமானது. பொதுவாகவே மனிதன் நாகரீகத்தோடு வளர ஆரம்பித்தவுடன் காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடிப்பது. காலையில் 5 முதல் 5.30 மணிக்குள் உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

    பிரயாணம்

    பிரயாணம்

    காலையில் 6 மணிக்காவது எழுந்து கொள்ளும் முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். முடிந்தால் 5.30 மணிக்குக் கூட எழுந்து கொள்ளலாம். எழுந்தவுடன் ஒரு லிட்டர் அளவுக்கு இளம் சூடான நீரை குடிக்க வேண்டும். சிலருக்கு காலையில் எழுந்து காபி குடித்தால்தான் மலமே கழிக்கும் நிலையில பலருக்கு இருக்கிறது. சிலர் பிரயாணத்தின் போது காலையில் எதையும் சாப்பிட மாட்டார்கள்.

    ஆபத்தானது

    ஆபத்தானது

    சாப்பிட்டால் உடனே கழிப்பறையை தேட வேண்டும் என்பார்கள். ஆனால் உடல் கழிவுகள் உடலைவிட்டு வெளியேறாமல் உடலிலேயே இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது. எனவே காபி, டீ குடிப்பதை விடுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவைப்பட்டால், ஒரு சிட்டிகை சீரகம், ஒரு சிட்டிகை சுக்கு, ஒரு சிட்டிகை தனியா போட்டு நன்கு கொதிக்கவிடவும்.

    30 நிமிடங்கள்

    30 நிமிடங்கள்

    அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது வாயில் இருந்து வயிறு வரை நாம் தூங்கும் போது சுரந்திருந்த திரவங்கள், அமிலங்கள் அடித்துக் கொண்டு மலத்துடன் வெளியே வந்துவிடும். உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானது. குறைந்தது 30 நிமிடங்களாவது நாம் நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

    மலச்சிக்கல்

    மலச்சிக்கல்

    மலச்சிக்கலை நீக்குவதற்கென்றே நிறைய உடற்பயிற்சிகள் இருக்கின்றன. மூன்றாவது உணவை கொண்டு நாம் எப்படி மலச்சிக்கலை தீரப்பது என்பதை பார்ப்போம். வாழைப்பழம், பப்பாளி பழம், ஆப்பிள் பழம், ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, பைனாப்பிள், சப்போட்டா,மாம்பழம் உள்ளிட்ட நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.

    பழங்கள்

    பழங்கள்

    மா, பலா, வாழை என சொல்லக் கூடிய மூன்றும் மிகப் பெரிய நார்ச்சத்து உள்ள உணவுகளாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மேற்கண்ட பழங்களில் தினமும் ஏதாவது ஒரு பழத்தை 75 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். இதனால் மலச்சிக்கல் முழுமையாக தீர்ந்துவிடும்.

    மலமிளக்கி

    மலமிளக்கி

    இந்த பழங்களை சாப்பிட முடியாவிட்டால் மலமிளக்கிகளை சாப்பிட வேண்டும். மலமிளக்கி என வரும் போது திரிபலா சூரணம், கடுக்காய் சூரணத்தை சாப்பிடுகிறார்கள். அது மிகப் பெரிய தவறு. இந்த இரு சூரணங்களும் நேரடியாக குடல் வறட்சித்தன்மையை கொண்டு வரும். நார்ச்சத்து உணவில் இருந்து தயாரிக்கக் கூடிய ஏதாவது ஒரு மலமிளக்கியை நாம் உண்ணலாம்.

    நார்ச்சத்துள்ள பழங்கள்

    நார்ச்சத்துள்ள பழங்கள்

    புரூன்ஸ் என்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 புரூன் பழத்தை சாப்பிட்டால் போதும் மலம் நன்றாக எளிதாக வெளியேறும். சஜோலாக்ஸ் என்ற மலமிளக்கி உள்ளது. இது ஒரு மூலிகை பொருளாகும். இதை 5 கிராம் (அரை தேக்கரண்டி) எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கச் செல்லும் முன் சாப்பிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் மலம் ஒரு சிறு தடங்கல் கூட இல்லாமல் வெளியே வரும் என்றார்.

    English summary
    Sri Varma Ayurveda Hospital Dr Gowthaman says about solution for constipation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X