சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாது தாக்கு... பிரசாந்த் கிஷோருடனான ஆலோசனைகள் குறித்து இன்றும் ராமதாஸ் விளாசல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரசாந்த் கிஷோருடனான ஆலோசனைகள் குறித்து ராமதாஸ் விளாசல் | Ramadoss

    சென்னை: தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோரை முன்வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்றும் ட்விட்டரில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாந்த் கிஷோர்ரின் பெயர்களை ஊடகங்கள் உச்சரிக்காமல் இருந்தது இல்லை. தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கான தேர்தல் ஆலோசகராக அவர் பணியாற்றி வருகிறார்.

    Dr Ramadoss comments again on Prashant Kishor

    தமிழகத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற்றதாக கூறப்பட்டது. தற்போது இந்த பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.

    2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் மதுரையில் மாநாட்டை கூட்டி கட்சி பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார் எனவும்கூறப்பட்டது.

    இந்த பின்னணியில் பிரசாந்த் கிஷோரை முன்வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று உரையாடல் வடிவில் கிண்டலடித்திருந்தார்.

    அதில்

    ஒரு உரையாடல்:

    ''அண்ணே... எங்கண்ணே போறீங்க?''

    '' அட... அது ஒன்னும் இல்லப்பா.... இந்த பிரஷாந்த் கிஷோரை பார்த்துட்டு வரலாம்னு தான் போறேன்''

    என பதிவிட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ்.

    இந்நிலையில் இன்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய உரையாடலின் தொடர்ச்சி.... என்ற தலைப்பில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:

    '' அண்ணே.... பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?''

    '' இல்லப்பா.... அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்'' இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டிருக்கிறார்.

    English summary
    Here is the PMK Founder Dr Ramadossn new tweet on Prashant Kishor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X