சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7.5% இடஒதுக்கீடு- ஆளுநருக்கு எங்கிருந்தோ அழுத்தம்- அதிகார மையங்கள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்வதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது: 7.5% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து அதிகபட்சமாக ஒரு நாளில் சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுக்க முடியும். ஆனால், முதன்முதலில் இதற்கான பரிந்துரை ஜூன் 15-ஆம் தேதி ஆளுனருக்கு அனுப்பப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில் இன்னும் ஆலோசனை நடத்துவதாக கூறுவதை நம்ப முடியவில்லை!

7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

எங்கிருந்தோ வரும் அழுத்தம்

எங்கிருந்தோ வரும் அழுத்தம்

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகி விடக் கூடாது என்ற எண்ணமும், எங்கிருந்தோ அளிக்கப்படும் அழுத்தமும் தான் இந்த தாமதத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதியை விளைவிக்கும்!

காலம் தாழ்த்தும் முயற்சி

காலம் தாழ்த்தும் முயற்சி

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 3 வாரங்கள் ஆகும் என ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மையென்றால் 3 வார அவகாசம் காலம் தாழ்த்தும் முயற்சியே!

அதிகார மையங்கள் விரும்புவது என்ன?

அதிகார மையங்கள் விரும்புவது என்ன?

நவம்பர் இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று MCI உத்தரவிட்டால், மாணவர் சேர்க்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எழும் அல்லது எழுப்ப வைக்கப்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்தப்படுவதைத் தான் அதிகார மையங்கள் விரும்புகின்றனவோ?

இடஒதுக்கீடு கைவிடல் பெரும் பாவம்

இடஒதுக்கீடு கைவிடல் பெரும் பாவம்

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramaodss has slammed that Governor's delay over assent to 7.5% reservation Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X