சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொழி தெரியாமல், அட்ரஸ்களை எப்படி படித்து லெட்டர்களை தருவார்கள்.. ராமதாஸ் விளாசல்

அஞ்சல் துறையில் இந்தி திணிப்புக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "நாளைக்கு தேர்வு.. இப்போது திடீரென இப்படி ஒரு அறிவிப்பா" என்றும் அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழே தெரியாதவர்களை வேலைக்கு அமர்த்தினால், தமிழில் உள்ள அட்ரஸ்களை எப்படி படித்து கடிதங்களை தருவார்கள்? என்றும் டாக்டர் கேள்வி எழுப்பு உள்ளார்.

தபால் துறையின்கீழ் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தபால் நிலையங்களில் போஸ்ட்மேன், மெயில் கார்டு, உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியானால், போட்டித்தேர்வு மூலம்தான் இவ்வளவு காலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

தபால்துறை தேர்வில் தமிழ் நீக்கம்: தமிழகம் போராட்ட களமாக மாறும்.. திருமா எச்சரிக்கை, ஸ்டாலின் கண்டனம் தபால்துறை தேர்வில் தமிழ் நீக்கம்: தமிழகம் போராட்ட களமாக மாறும்.. திருமா எச்சரிக்கை, ஸ்டாலின் கண்டனம்

3 ட்வீட்கள்

3 ட்வீட்கள்

ஆனால், புதிய மாற்றங்கள் என்ற பெயரில், மாநில மொழிகளில் நடைபெற்று வந்த தபால்துறை முதன்மை பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத்தேர்வானது, இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி டாக்டர் ராமதாசும் கண்டனம் தெரிவித்து அடுத்தடுத்து 3 ட்வீட்களை போட்டு தாக்கி உள்ளார்.

கண்டிக்கத்தக்கது

அதில், "அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்!" என்று ஒரு பதிவு.

வழக்கு

"தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்" இது இரண்டாவது பதிவு.

வட இந்தியர்கள்

"இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்?" என்று கேள்வி கேட்டுள்ளது மூன்றாவது பதிவு.

English summary
PMK Founder Dr Ramadoss condemns on Hindi impostition in Postal exam and tweet about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X