சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக?

Google Oneindia Tamil News

சென்னை: வர வர பாமக நிறுவனர் ராம்தாஸ் என்ன செய்கிறார், என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை.

கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது. அதற்காக எல்லா கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இதற்கான கூட்டணிக்கும் தயாராகி அதற்கான தூது வேலைகளும் நடந்து வருகின்றன.

இதில் பாமகவும் தேர்தலுக்கு போட்டியிட போகிறது. கூட்டணி வைத்துதான் போட்டியிட போகிறோம் என்று கறாராக சொல்லிவிட்டாலும், யாருடன் கூட்டணி என்று இதுவரை அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

குழப்பி உள்ளார்

குழப்பி உள்ளார்

கூட்டணியில் திமுக இல்லை என்பது தெரிந்துவிட்ட நிலையில், மற்றவர்களுடன் தன் நிலைப்பாட்டை இன்னும் பாமக சொல்லவில்லை. எனவே கூட்டணி வியூகம் அமைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரு ட்வீட்டை போட்டு எல்லோரையுமே குழப்பி இருந்தார் ராமதாஸ்.

விளங்க முடியாத ட்வீட்

"பேரிக்காய் பழுக்கும் வரை காத்திருக்க மனமில்லாத ஒருவன் தினமும் மரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.அவன் கட்டாயப்படுத்தி பழுக்க வைக்க முயன்றால் பழம், மரம் இரண்டும் நாசமாகி விடும்.பொறுமையுடன் காத்திருந்தால் பழுத்த பழம் அவனது மடியில் விழும்! - ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்." என்று பதிவிட்டார். இவர் யாரை சொல்கிறார், எதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்றே புரியாமல் இருந்தது.

ராமதாஸ் அறிக்கை

ராமதாஸ் அறிக்கை

இந்தநிலையில், தெலுங்கானாவில் பெரு வெற்றி பெற்ற சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ஒரு அறிக்கையைம் ராமதாஸ் விடுத்துள்ளார். பாஜகவுடன் ரொம்பவும் தனது எதிர்ப்பை காட்டவில்லை என்றாலும் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுதான் உள்ளது பாமக.

சிக்னல் காட்டுகிறாரா?

சிக்னல் காட்டுகிறாரா?

ஆனால் சந்திர சேகரராவோ பாஜகவையே தோற்கடித்தவர். அவருக்கு இப்போது ராமதாஸ் வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்றால் இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் உள்ளது. அப்படியானால் பாஜகவுக்கு எதிராக ராமதாஸ் காய் நகர்த்துகிறாரா? அல்லது பெரும்பன்மையாக காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதால், ராகுலுடன் இணைய சிக்னல் காட்டுகிறாரா என்று தெரியவில்லை.

அர்த்தம் என்ன?

அர்த்தம் என்ன?

ஏற்கனவே பேரிக்காய் பழம் ட்வீட்டுக்கு இன்னும் விடையே கிடைக்காத நிலையில், சந்திரசேகரராவிற்கு வாழ்த்து சொன்னதன் அர்த்தம் புரியவே இல்லை.

English summary
Dr.Ramadoss congratulates Chandrashekhar Rao who won the Telangana Legislative assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X