சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும்: பிரணாப் ஆலோசனைக்கு ராமதாஸ் வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையை வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரணாப் முகர்ஜி, நாட்டின் மக்கள் தொகை 55 கோடியாக இருந்த போது 1977-ல் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை திருத்தப்பட்டது. தற்போது மக்கள் தொகை இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்றார்.

Dr Ramadoss demands to increase of Lok Sabha MPs and Assembly MLAs strength

பிரணாப் முகர்ஜியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது:

மாணவர்களின் மண்டையை உடைத்தார்கள்.. மோசமாக தாக்கினார்கள்.. உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!மாணவர்களின் மண்டையை உடைத்தார்கள்.. மோசமாக தாக்கினார்கள்.. உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!

மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இந்த யோசனையை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை 6-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

மக்களவை மட்டுமின்றி சட்டப்பேரவை தொகுதிகளையும் அதிகரிக்க வேண்டும். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படாமல்,இப்போதுள்ள விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும். இதற்கு வசதியாக 2001-ஆம் ஆண்டின் 84வது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும்!.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has demanded that to Govt should increase the Lok Sabha MPs and Assembly MLAs strength.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X