சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்
சென்னை: சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் இளவேனில் வாலறிவனுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சீனாவின் புடியன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டிகளின் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு பாராட்டுகள். 3 மாதங்களில் உலக அளவில் இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றுள்ள அவர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகள்!
1. புடியன் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று இந்தியாவின் இளவேனில், மனு, திவ்யான்ஷ் ஆகியோர் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் சாதனைகள் தொடரட்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 21, 2019
புடியன் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று இந்தியாவின் இளவேனில், மனு, திவ்யான்ஷ் ஆகியோர் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் சாதனைகள் தொடரட்டும்!
கூடங்குளம் போராட்டக்காரர்கள் 9.000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.