சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுப்பு- ராமதாஸ் பாராட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    RCEB - யில் இந்தியா ஏன் இணையவில்லை? மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்?

    சென்னை: தடையற்ற வர்த்தகத்துக்கான மண்டல பொருளாதார ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுத்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இதேநிலை நீடிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    Dr Ramadoss hails PM Modi on not to sign RCEP

    டாக்டர் ராமதாஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    டெல்லியில் வரும் ஜனவரி மாதத்தில் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டுக்கான மாநாட்டிற்காக ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தான் தன்திறமை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். மாநில மொழிகளை புறக்கணித்து, இந்தியில் தான் அறிக்கை தர வேண்டும் என்பது இந்தியை வெளிப்படையாக திணிக்கும் செயல் என்பதைத் தவிர வேறல்ல!

    மொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!மொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு!

    தெலுங்கானாவில் பெண் வட்டாட்சியர் ஒருவர் அலுவலகத்திலேயே தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனைவருமே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் நாடு என்னவாகும் என நினைக்கவே அச்சமாக உள்ளது. அதிகாரிகளுக்கு கடமையும், மக்களுக்கு பொறுமையும் மிகவும் அவசியம்!

    Dr Ramadoss hails PM Modi on not to sign RCEP

    பிரதமர் மோடிக்கு பாராட்டு

    தடையற்ற வணிகத்திற்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த மண்டல பொருளாதார ஒப்பந்தம் (RCEP) இந்திய உழவர்கள், தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது என்று கூறி, அதில் கையெழுத்திட பிரதமர் மறுத்திருப்பது பாராட்டத்தக்கது. இதேநிலை நீடிக்க வேண்டும்!

    நீட் விவகாரம்

    நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சி ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வணிகமாக மாறியிருக்கிறது. தனிப்பயிற்சி நிறுவனங்களின் காட்டில் பணமழை பெய்ய வேண்டும் என்பதற்காக அப்பாவி ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவுகள் பலி கொடுக்கப் படுகின்றன. வாழ்க வணிகமயம்!

    நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் மிகவும் சரியானவை; நியாயமானவை. இவை ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியால் எழுப்பப்பட்டவை. நீட் தேர்வும், மருத்துவக் கல்வியும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது நிரூபிக்கப்பட்ட பிறகும் நீட்டை நீட்டித்துக் கொண்டே செல்வது நியாயமா?

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    English summary
    PMK Founder Dr Ramadoss hailed Prime Minister Modi for not to sign in RCEP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X