சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேவேந்திர குல வேளாளர் பண்பாடு குறித்து பிரதமர் மோடி 10 நிமிடம் பேசியதில் மகிழ்ச்சி: டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்து பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    7 உட்பிரிவுகளும் தேவேந்திர குல வேளாளர்கள்… அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி!

    சென்னையில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 7 உட்பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு தேவேந்திர குல வேளாளர்களாக அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

    Dr Ramadoss happy over PM Modis speech on Devendrakula Vellalar

    மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் குறித்து நெகிழ்ச்சியாகவும் பிரதமர் மோடி பேசினார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

    தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் #ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன!

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    English summary
    Dr Ramadoss happy over the Prime Minister Modi's speech on Devendrakula Vellalar in Chennai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X