சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த காலத்திலும் நம்ப கூடாது என்று கருணாநிதி சுட்டிக் காட்டிய அரசியல் தலைவர் யார்? ராமதாஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தம்மிடம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, எந்த காலத்திலும் நம்ப கூடாது என்று சுட்டிக்காட்டிய அரசியல் தலைவர் யார்? என்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ட்விட்டர் பக்கம் கடந்த 2 நாட்களாக தகித்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் போட்ட ஒரு ட்விட்டால் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரூ. 15,128 கோடி முதலீடு- 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்துரூ. 15,128 கோடி முதலீடு- 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து

 ராமதாஸ் பதிவு

ராமதாஸ் பதிவு

அப்படி பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று போட்ட பற்ற வைக்கும் ட்வீட் இதுதான். திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். இதுதான் ராமதாஸ் ட்வீட்.

 கருணாநிதி சொன்னது யார்?

கருணாநிதி சொன்னது யார்?

இதனைமுன்வைத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி குறிப்பிட்ட அந்த நம்பிக்கையற்ற தலைவர் இவர்தான்..அவர்தான்.. இல்லை இல்லை அவராகத்தான் இருக்கும் என ஏகப்பட்ட யூகங்கள்.. ஏகப்பட்ட விமர்சனங்களுடன் அனல் பறந்து கொண்டிருந்தது. இப்போது இந்த அனலுக்கு மத்தியில் இன்னொரு ட்வீட் போட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

 இன்று ராமதாஸ் விளக்கம்

இன்று ராமதாஸ் விளக்கம்

அதில், இந்த பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், விசிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல! என மீண்டும் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.

 2-வது நாளாக விவாதம்

2-வது நாளாக விவாதம்

பிறகு என்ன இந்த ட்வீட் பதிவுக்கும் பதிலைத் தேடி பரபரக்கின்றனர் நெட்டிசன்கள். டாக்டர் ராமதாஸ் குறிப்பிடாத இயக்கங்கள், கட்சிகளை தேடிப் பார்த்து அந்த தலைவராக இருக்கலாம்,... இந்த தலைவராக இருக்கலாம் என 2-வது நாளாக கச்சேரி களைகட்டிக் கொண்டிருக்கிறது.

English summary
PMK Founder Dr Ramadoss today posted a new tweet on Tamilnadu Leaders in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X