சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணா பல்கலை. துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா.. ராமதாஸ் சுளீர்!

Google Oneindia Tamil News

சென்னை: கன மழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தும் கூட அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்தியிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. கன மழையைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் கட்டாயப்படுத்தி தேர்வு நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Dr Ramadoss questions Anna university VC

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருக்கிறது. அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா அண்ணா பல்கலை. துணைவேந்தர்?

அரசு மழை விடுமுறை அறிவிக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களும் தங்களது தேர்வுகளை ஒத்திவைப்பது வழக்கம். சமீபத்தில் கூட அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஒத்திவைத்தது. அதேபோல நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் பந்த் நடத்தியபோது அதையொட்டி அந்த மாவட்டத்தில் மட்டும் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஒத்திவைத்தது என்பது நினைவிருக்கலாம்.

English summary
PMK founder Dr Ramadoss has questioned Anna university VC, why the University conducted its exams in its Colleges despite the TN Govt announced holiday on Thursday due to Rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X