சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாமக கொடி பறக்கட்டும்.. அதனால்தான் நாம் பாட்டாளிகள்.. என்ன சொல்ல வருகிறார் டாக்டர் ராமதாஸ்..!

முன்னாள் எம்எல்ஏ கடிதத்தை பகிர்ந்துள்ளார் டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் எம்எல்ஏ இராஜமன்னார் எழுதிய கடிதம் ஒன்றை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.. அது தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சில சமயங்களில் வித்தியாசமான பதிவுகளை வெளியிடுவார்.. சில சமயம் குட்டிக்கதைகளை சொல்வார்.. சில சமயம் விடுகதைகளை போடுவார்.. பல நேரங்களில் கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வு டிப்ஸ் தருவார்.

இப்படி எந்த பதிவு போட்டாலும், அத்தனையும் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிடும்.. இப்போதும் ஒரு பதிவு போட்டுள்ளார்.

எப்போமே கடைசியில்தான் அறிவிப்பு வரும்.. எல்லாம் நம்மை தடுமாற வைக்கத்தான்! உஷார்!! ராமதாஸ் கடிதம்எப்போமே கடைசியில்தான் அறிவிப்பு வரும்.. எல்லாம் நம்மை தடுமாற வைக்கத்தான்! உஷார்!! ராமதாஸ் கடிதம்

ராமதாஸ்

ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பூந்தமல்லி தொகுதி பா.ம.க. வேட்பாளருமான இராஜமன்னார் டாக்டர் ராமதாசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. அந்த கடிதத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருக்கும் டாக்டர் ராமதாஸ், அதற்கு ஒரு புது விளக்கத்தையும் தந்துள்ளார்.. அனைத்து விஷயத்திலும் எனது நிலையும், பாட்டாளிகளின் நிலையும் ஒன்றாகவே இருக்கும். அதனால் தான் நாம் பாட்டாளிகள்" என்றும் தெரிவித்துள்ளார். பாம.க. கொடி குறித்த பதிவும் பாட்டாளியிடமிருந்து வந்த பதிலும்" என்ற தலைப்பில் டாக்டரின் ஃபேஸ்புக் பதிவு இதுதான்:

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘பாட்டாளிகளின் கொடி எங்கும் பட்டொளி வீசி பறக்கட்டும்! ' என்ற தலைப்பில் கடந்த 19-ஆம் தேதி முகநூல் பதிவு வெளியிட்டிருந்தேன். அதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பூந்தமல்லி தொகுதி பா.ம.க. வேட்பாளருமான இராஜமன்னார் கருத்துத் தெரிவித்து எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

Recommended Video

    Anbumani Ramadoss வேதனை!..மனதில் பாரம் இருக்கிறது | Oneindia Tamil
    மதிப்பீடு

    மதிப்பீடு

    அவ்வையாரின் வாழ்க்கை நெறி பாடல் தத்துவங்கள் குறித்த எனது மதிப்பீடும், அவரது மதிப்பீடும் ஒன்றாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அவரது கருத்து உண்மை தான். இந்த விஷயத்தில் மட்டுமல்ல... அனைத்து விஷயத்திலும் எனது நிலையும், பாட்டாளிகளின் நிலையும் ஒன்றாகவே இருக்கும். அதனால் தான் நாம் பாட்டாளிகள். இனி ராஜமன்னாரின் கடிதம்:

    இராஜமன்னார் பி.ஏ.,பி.எல்.,
    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
    பாட்டாளி மக்கள் கட்சி

    பெறுநர்
    மரியாதைக்குரிய ஐயா டாக்டர் ச.இராமதாசு அவர்கள்
    நிறுவனர் - பாட்டாளி மக்கள் கட்சி

    மரியாதைக்குரிய ஐயா ,

    பாட்டாளிகளின் கொடி எங்கும் பட்டொளி வீசி பறக்கட்டும்! என்று இன்று தாங்கள் எழுதியதில், வாழ்க்கையின் தத்துவங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தவர் திருவள்ளுவர். அவரையும்விட வாழ்க்கை நெறிகளை சுருக்கமாக சொன்னவர் அவ்வையார் என்று கூறியுள்ளீர்கள்.

    நெறிமுறைகள்

    நெறிமுறைகள்

    ஐயா, பெருமைக்குக் கூறவில்லை... தங்களின் உந்துதலால்... நான் எழுதிய 1) வேழம் எய்த வேல் 2) கலர் நில உப்பு என்ற புத்தகங்களில் இரண்டாவதில், அவ்வையார் பாடல்கள் முன்னுரையில் நான். அவ்வையாரின் இந்த நீதி நூல்கள் மாணவர்களுக்கு உரை ஆசிரியர்களின் உதவி இல்லாமல் புரியும் வண்ணம் அமைந்தவை, மிகவும் எளிமையானவை, இனிமையானவை. திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் உலகத்தை அளந்தார், ஆனால் அவ்வையார் முக்கால் அடியில் உலகத்தை அடக்கி நீதி நெறிமுறைகள் வகுத்தார், என்று எழுதியுள்ளேன். ஐயாவின் கருத்தினையே நானும் எழுதி இருப்பது எனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது.

    நல்வழி

    நல்வழி

    அதைப்போல அய்யா, அவ்வையின் ‘நல்வழி' நூலில் நீரில்லா ‘நெற்றி பாழ்'................ பாழே, மடக்கொடி இல்லா மனை' என்ற பாடலை எழுதி அத்தோடு,‘ஊரின் நுழைவாயிலிலும், ஊருக்குள்ளும் ஏற்றப்படாத கட்சி அமைப்பு பாழ்' என்று பாட்டாளி சொந்தங்களுக்கு நல்வழி காட்டி இருப்பது உணர்ச்சி ஊட்டியது ஐயா!
    அவையின் ‘மூதுரை' நூலில் உள்ள ஓர் பாடலை சற்றே திருத்தி எழுதுகிறேன். ‘ஐயா போலும் நல்லாரைக் காண்பதுவும் நன்றே; வீரதீரமிக்க போராளி சொல் கேட்பதுவும் நன்றே; குஹிலகுல சத்திரியரின் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; ஆயிரம் பிறை கண்ட மகானோடு இணங்கி இருப்பதுவும் நன்றே'!!!" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனித்து போட்டி என்ற முடிவில் உள்ளது பாமக.. கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது... ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்... அதேபோல, பாமகதான் அதிமுக தோல்விக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டியிருந்தார்... இதனால் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது போலவே இந்த முறையும் தனித்து களமிறங்கும் நிலையில், பாட்டாளிகளுக்கான ஆதரவாளராக தன்னை முன்னிறுத்தியே வருகிறார் டாக்டர் ராமதாஸ்..!

    English summary
    Dr Ramadoss released the letter of the Ex PMK MLA Rajamannar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X