சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோப்பு குடுங்க.. பாட்டு போடுங்க.. வணக்கம் சொல்லுங்க.. யாருக்கும் கை கொடுக்காதீங்க.. சபாஷ் டாக்டர்!

இலவச சோப் வழங்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எல்லாருக்கும் இலவசமா சோப்பு குடுங்க.. பாட்டு போடுங்க.. திரும்பவும் சொல்றேன், யாருக்கும் கை குடுக்காதீங்க.. வணக்கம் சொல்லுங்க.. கை கழுவுங்க" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடுக்கடுக்கான அட்வைஸ்களை பொதுமக்களுக்கு தெரிவித்து, அப்படியே அரசுக்கும் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    குழந்தைகளுக்கு வைரஸ் பரவாமல் இருக்க இதை கடைபிடிங்க |Some tips to safeguard your children from Corona

    கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    dr ramadoss request give peoples for free handwash soaps

    தமிழகத்திலும் இதன் வைரஸ் குறித்த பீதி அதிகமாகவே எழுந்துள்ளது.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த நோய் தொற்றில் இருந்து விடுபட பல்வேறு ஆலோசனைகளை அவ்வப்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

    அந்த வகையில் இப்போதும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு அட்வைஸ் தந்துள்ள டாக்டர் ராமதாஸ், சோப்பு வாங்க வசதியில்லாத மக்கள் எப்படி அடிக்கடி கையை கழுவ முடியும்.. பொதுமக்களுக்கு கைகழுவ அரசு இலவச சோப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அந்த ட்வீட்கள் இவைதான்:

    dr ramadoss request give peoples for free handwash soaps

    "1.மீண்டும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள்!"

    "2.தமிழ்நாட்டில் 40% மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை இதற்காக கேட்டுப் பெறலாம்!"

    என்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா? பகீர் கிளப்பும் பஞ்சாப் என்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா? பகீர் கிளப்பும் பஞ்சாப்

    "3. கொரோனாவை தடுக்க சான்பிரான்சிஸ்கோ நகரில் பொது இடங்களில் இசையுடன் கூடிய கை கழுவும் எந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 20 வினாடிகளுக்கு ஒலிக்கும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் அல்லது பிற பாடலை ரசித்தபடியே கைகளை கழுவலாம். சென்னையிலும் இந்த முயற்சியை பரிசீலிக்கலாம்!" என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    dr ramadoss request give peoples for free handwash soaps
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X