சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழருவி மணியனின் லூஸ் டாக்.. டாக்டர் ராமதாஸ் கொடுத்த பொளேர் பதில்.. ரஜினிக்கும் போற போக்கில் குட்டு

ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக - ரஜினி கூட்டணியின் பின்னணி இதுதான் | Rajinikanth lead alliance will target to DMK

    சென்னை: அப்பாடா.. ரஜினி விஷயமாக டாக்டர் ராமதாஸ் வாயை திறந்து கருத்து சொல்லி உள்ளார்.. "முதல்ல அவர் கட்சி தொடங்கட்டும்.. அப்பறம் கூட்டணி பத்தி யோசிக்கலாம்" என்று பளிச்சென சொல்லி, நிலவி வரும் பரபரப்புகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதத்தில் கட்சி தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்த உள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார்.

    அர்ஜுன் சம்பத் போன்று வேறு யார் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை.. ஆனால், தமிழருவி மணியனே இதை சொல்லியதுதான் சீரியஸாக எடுத்து கொள்ளப்பட்டது.. பல விவாதங்களையும் கிளப்பியது.

     திமுக பாணியை பின்பற்றும் அதிமுக... நிர்வாகிகளுக்கு சுதந்திரம் கொடுத்த ஓ.பி.எஸ். திமுக பாணியை பின்பற்றும் அதிமுக... நிர்வாகிகளுக்கு சுதந்திரம் கொடுத்த ஓ.பி.எஸ்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    வெறும் பூடகமாக சொல்லாமல், பாமகவும் ரஜினிகாந்தின் கட்சியும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்று சொன்னதுதான் ரஜினி அரசியல் வருகையை பரபரப்பாக்கியது.. ஒருபடி மேலேபோய் அமமுக கூட்டணியில் கிடையாது என்று சொன்னது, ஒட்டுமொத்த அரசியல் களத்தையே சூடாக்கிவிட்டது. பாமக - ரஜினிகாந்த் என்பது புது காம்பினேஷன்.

    சந்தேகங்கள்

    சந்தேகங்கள்

    இரு தரப்புக்குமே எப்போதுமே ஆகாது என்பதுதான் நாம் பார்த்து வந்த யதார்த்தம்.. ஆனால் இருவரும் ஒன்றுசேர போகிறார்கள் என்பதை நம்புவதா? இது உண்மையா என்ற பல சந்தேகங்கள் எழுந்தபடியே இருந்தன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை டாக்டர்.ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார். இதற்கு பின் செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது ரஜினிகாந்த் உடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு டாக்டர் சொன்னதாவது"

    கூட்டணி

    கூட்டணி

    "ரஜினிகாந்த்துடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழருவி மணியனின் பேட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்பதால் தான் அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை... ரஜினிகாந்த் முதலில் கட்சியை ஆரம்பிக்கட்டும்.. ரஜினி-பாமக கூட்டணி என்ற தகவல் இப்போதைக்கு முக்கியத்துவம் இல்லாதது.. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் இதைப் பற்றி பேசலாம்" என்று பதிலளித்தார்.

    கூட்டணி இல்லை?

    கூட்டணி இல்லை?

    "அவர் முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும்".. இது தமிழகம் கேட்டு கேட்டு புளித்து போன வாசகம் என்றாலும், இதை இந்த சூழலில், டாக்டர் சொல்வதில் நிறைய அர்த்தம் உள்ளதாகவே தெரிகிறது... அதே சமயம், ரஜினிகாந்த்துடன் கூட்டணி இல்லவே இல்லை என்றும் டாக்டர் அடித்து சொல்லவில்லை.. இதுவும் கவனிக்கத்தக்கது!! "அவர் முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும்".. இது தமிழகம் கேட்டு கேட்டு புளித்து போன வாசகம் என்றாலும், இதை இந்த சூழலில், டாக்டர் சொல்வதில் நிறைய அர்த்தம் உள்ளதாகவே தெரிகிறது... அதே சமயம், ரஜினிகாந்த்துடன் கூட்டணி இல்லவே இல்லை என்றும் டாக்டர் அடித்து சொல்லவில்லை.. இதுவும் கவனிக்கத்தக்கது!!

    English summary
    actor rajinikanths political entry: pmk founder Dr ramadoss says about rajinikanth politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X