சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டர் ராமதாஸை கரைத்து போட்ட பாடல்.. நீங்களும் கேளுங்கள்.. மனம் கனத்து போவீர்கள்!

டாக்டர் ராமதாஸ் கேரள பாடகரின் பாடல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இது பலருக்கு தெரிந்து இருக்கிறதோ இல்லையோ.. டாக்டர் ராமதாஸ் ஒரு நல்ல கலா ரசிகன்.. தனக்கு ஒரு பாட்டை ரொம்ப பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.

தமிழ், தமிழக மக்கள், பண்பாடு, கலாச்சாரத்தில் அதீத அக்கறை எடுத்து கொள்பவர் டாக்டர் ராமதாஸ்! இதைதவிர மண்ணையும், மக்களையும் பாதிக்கும் சமாச்சாரத்தையும் இடித்து சொல்லவும் தயங்க மாட்டார்.

Dr Ramadoss says This is My Favorite Song and Tweet about it

ஆனால் காதல், சினிமா இது பற்றியெல்லாம் டாக்டரின் நிலைப்பாடு என்ன என்று நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் ராமதாசுக்கு ஒரு பாடல் ரொம்பவே பிடித்துவிட்டது.

கேரளத்தின் பிரபல பாடகர் தோழர் ரேஷ்மி சதீஷ் பாடிய சமூக நலன்மிக்க பாடல் அது. அந்த பாட்டை காயல்பட்டினத்தின் சிறந்த பாடகர்களுள் ஒருவரான கே.கே.சாஷுல் ஹமீது தமிழில் பாடியுள்ளார்.

இந்த பாட்டைதான் தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டு, "நான் பலமுறை கேட்டு ரசித்த இயற்கையையும்,
மனிதத்தையும் போற்றும் பாடல்! நீங்களும் கேட்டு மனிதத்தின் மகத்துவத்தை உணருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள்தான்!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே.. அந்நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே. மீனும் முழுகிடக் குளிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே.. வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே.. கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

அந்நாட்டில் நிழல் இருந்ததே.. மண் வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிசிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே

நல்ல மழை பெய்திருந்ததே.. நரகத்தீ சூடில்லையே
தீவட்டிக் கொள்ளை இல்லையே.. தின்றது எதுவும் நஞ்சில்லையே..

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வர பலருண்டங்கே

நாடெங்கும் மதில்கள் இல்லையே.. நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணி பூவிருந்ததே.. நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே

அன்றும் பல மதம் இருந்ததே.. அதையும் தாண்டி அன்பிருந்ததே
உன்னை படைதோன் என்னை படைத்தோன் என்றதொரு சண்டையில்லையே

அந்நாட்டைக் கண்டவர் உண்டோ.. எங்கே போனது தெளிவுண்டோ
அந்நாடு இறந்து போனதோ, அது வெறும் ஒரு கனவானதோ"

 பாஜகவிடம் ரொம்பவே ஓபிஎஸ் பணிந்து போவதற்கு இந்த 2 காரணங்கள்தான்! பாஜகவிடம் ரொம்பவே ஓபிஎஸ் பணிந்து போவதற்கு இந்த 2 காரணங்கள்தான்!

இதுதான் அந்த பாட்டும், பாட்டு வரிகளும். ஆனால் பாடலை பாடிய விதத்தை கேட்கும்போது நம்மை என்னவோ செய்கிறது.. எதையோ இழந்ததை மனம் தேடுகிறது.. எளிய நடை, இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவுஎன அனைத்துமே கலந்து இருக்கிறது இந்த பாட்டு! அதனால்தான் ராமதாசுக்கு பிடித்திருக்கிறது போலும்!

English summary
Dr Ramadoss tweet Kerala Singer Reshmi Singer Song and says This is My Favorite Song"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X