சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்:முதல்வர் எடப்பாடி அறிவிப்புக்கு ராமதாஸ். சீமான் நன்றி

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

Dr Ramadoss, Seeman welcome for Cauvery Delta as Protected Agricultural Zone

ஆகையால் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கை. இதனை ஏற்று காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என அறிவித்தார்.

ராமதாஸ் வரவேற்பு

இதனை வரவேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பா.ம.க.வின் 10 அம்சக் கோரிக்கைகளில் முதன்மையானதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும்! இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

சீமான் நன்றி

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்ட ர் பக்கத்தில், 3 நாட்களுக்கு முன்பு சந்தித்தபோது, நாம் தமிழர் கட்சி சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் முதன்மையான கோரிக்கையான தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றி அறிவித்திருக்கிற தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி! என தெரிவித்துள்ளார்.

Take a Poll

English summary
PMK founder Dr Ramadoss and Naam Tamilar Katchi Chief- co ordinator Seeman welcome the Tamilnadu Govt's declaration of Cauvery Delta as Protected Agricultural Zone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X