சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் பொய்களை விற்று வெற்றி பெற்றோருக்கு சரியான பாடம் புகட்டுங்கள்... ராமதாஸ் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் பொய்களை விற்று வெற்றி பெற்றோருக்கு இடைத்தேர்தல்களில் சரியான பாடம் புகட்டுங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவின் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதே பஞ்சமி நிலத்தில்தான் என டாக்டர் ராமதாஸ் போட்ட ட்வீட் கடந்த சில நாட்களாக பெரும் புயலை கிளப்பியது. ராமதாஸின் ட்வீட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பட்டா ஆவணத்தை வெளியிட்டு பதில் கொடுத்தார்.

Dr Ramadoss slams DMK on Flase Election Promises

முரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி முரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி

ஆனால், முரசொலி கட்டிட நிலத்தின் மூல ஆவணம் எங்கே என மீண்டும் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசியலில் இருந்து விலகுகிறேன் என தமது சவாலை ஏற்றால் ஆவணங்களை தருகிறேன் என பதில் கொடுத்தார் ஸ்டாலின்.

Dr Ramadoss slams DMK on Flase Election Promises

மோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்மோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்

இந்நிலையில் இன்று ட்விட்டரில் திமுகவின் பெயரை குறிப்பிடாமல் டாக்டர் ராமதாஸ் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில், மக்களவைத் தேர்தலில் 50 ஆயிரம் பொய்கள் 20 லட்சம் முறை பகிரப்பட்டன: ஆய்வு நிறுவனம் செய்தி - இது என்ன பிரமாதம்.... தமிழகத்தில் ஓர் அணியின் ஒட்டுமொத்த பிரச்சாரமே பொய்களை பரப்புவதும், புளுகு மூட்டைகளை விற்பதும் தான் என்பது அந்த ஆய்வு நிறுவனத்திற்கு தெரியுமா? என ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

மற்றொரு ட்வீட்டில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாக வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் பொய்களை விற்று வெற்றி பெற்றவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்! என குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
PMK Founder Dr Ramadoss has slammed thad DMK on the Flase Election Promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X