சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்

பத்திரிகையாளர்கள் மீது டாக்டர் ராமதாஸ் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ramadoss Pressmeet: ஏண்டா.. பத்திரிகையாளர்களை அன்புடன் விளித்த டாக்டர் ராமதாஸ்!- வீடியோ

    சென்னை: "நான் பேசினது பேசினதுதான்.. பத்திரிகையாளர்கள் பத்தி நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.. திவ்யா அப்பா இறந்தது பத்தி யாராவது செய்தி போட்டாங்களா?" என்று டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

    2 தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்ப் படப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசும்போது, தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும், பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கடிந்துகொண்டார்.

    ஆனால் அப்போது பத்திரிகையாளர்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி திட்டியிருந்தார். "நாய்ங்களா.. சண்டாள பசங்களா.. என்றெல்லாம் வெகு சரளமாக சொல்லினார். 40 வருட அரசியலில் உள்ள ஒரு கட்சி தலைவர், அதிலும் டாக்டர்.. இப்படியெல்லாம் பேசுவாரா? பேசுவது சரிதானா? என்ற அதிர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டது.

    திட்டவட்டம்

    திட்டவட்டம்

    டாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

    திட்டவட்டம்

    திட்டவட்டம்

    டாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

    ஆர்எஸ்எஸ்

    ஆர்எஸ்எஸ்

    "பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதுணையாக இருப்பதை போல, பாமகவுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை பலமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி தர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    அநியாயம்

    அநியாயம்

    அன்புமணி என்ற நல்ல இளம் தலைவரை தமிழகத்துக்கு பாமக கொடுத்திருக்கிறது. அநியாயம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடும்.

    ஊடகங்கள்

    ஊடகங்கள்

    பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியது பேசியதுதான். என் கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து ஒரு வரி கூட ஊடகங்கள் செய்தி போடவில்லை. ஆனால் இளவரசன் தற்கொலையை கொலை என்று கூறி எங்கள் மீது பழி போடுகின்றன" என்றார்.

    தொடர்ந்து பத்திரிகையாளர்களை ராமதாஸ் தாக்கி பேசி வருவது, ஊடக துறையில் பெரிய அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    PMK Founder Dr Ramadoss slams Media and says about Reports in Chennai Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X