சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தியாகத்தின் பெருமையை போற்றும் பக்ரீத் திருநாள் - டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் வாழ்த்து

பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும்

Google Oneindia Tamil News

சென்னை: இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இந்த திருவிழா நினைவூட்டுகிறது. அவ்வளவு இறைபக்தி கொண்ட இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு தங்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தைக் கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தடுத்து விட்டது. கொரோனா வைரஸ் துயரம் விரைவில் தீர வேண்டும். இஸ்லாமியர்கள் புனிதக்கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளும் விலக வேண்டும் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தியாக திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

Dr Ramadoss, TTV Dinakaran and other leaders extend Bakrid greetings

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இந்தக் கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.

பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும்.இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இந்த திருவிழா நினைவூட்டுகிறது. அவ்வளவு இறைபக்தி கொண்ட இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு தங்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தைக் கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தடுத்து விட்டது. கொரோனா வைரஸ் துயரம் விரைவில் தீர வேண்டும்.

இஸ்லாமியர்கள் புனிதக்கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளும் விலக வேண்டும். பக்ரித் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும் - முதல்வர் பக்ரீத் வாழ்த்து அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும் - முதல்வர் பக்ரீத் வாழ்த்து

டிடிவி தினகரன் வாழ்த்து

Dr Ramadoss, TTV Dinakaran and other leaders extend Bakrid greetings

இதே போல அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும் வலிமையும் மற்ற எல்லாவற்றையும் விட பெரியது. அதனை மனதில் கொண்டு இந்த நல்ல நாளில் பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும் எளியவர்களிடம் கருணையும் காட்ட வேண்டும் என்றும் தனது வாழ்த்து செய்தியில் கூறயுள்ளார் டிடிவி தினகரன்.

Dr Ramadoss, TTV Dinakaran and other leaders extend Bakrid greetings
English summary
PMK leader Anbumani Ramadoss and TTV Dinakaran have also extended their Bakrid greetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X