சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதென்ன மோர்.. விட்டால் தயிர் ஆக்கிடுவாங்க போல இருக்கே.. டாக்டர் ராமதாஸ் சுளீர் போடு!

ஆங்கில பெயர் பலகைகள் குறித்து ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "அதென்ன மோர் சூப்பர் சூப்பர் மார்க்கெட்.. விட்டால் அடுத்து தயிர் சூப்பர் மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது" என்று ஆங்கில பெயர் பலகை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருத்தத்துடன் 2 ட்வீட் போட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் பாமகவும் உள்ளது... ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழக நலன்களை விட்டுத் தர மாட்டோம் என்று அன்றும், இன்றும் தெளிவாக சொல்லி வருபவர் டாக்டர் ராமதாஸ்.

இந்தி திணிப்பு விவகாரம் ஆகட்டும், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு ஆகட்டும், அஞ்சல்துறை தேர்வு ஆகட்டும், மத்திய அரசின் எந்தவித அறிவிப்பு வந்தாலும், அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் தலைவர்களில் முக்கியமானவர், முதன்மையானவர் டாக்டர் ராமதாஸ்! அந்த அளவுக்கு தமிழ் பற்றும், தமிழ் மொழி மீது காதலும் உள்ளவர்.

பெயர் பலகைகள்

இந்நிலையில், திடீரென 2 ட்வீட் போட்டுள்ளார் டாக்டர்.. இரண்டுமே சென்னையில் எங்கோ ஒரு கடைவாசலில் தொங்கி கொண்டிருந்த பெயர் பலகைகள்... அதில் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதாக எடுத்து பதிவிட்டுள்ளார். முதல் ட்வீட்டில், "சென்னையில் ஓர் பேரங்காடியின் பெயர் More Supermarket. ஏராளமான பொருட்கள் கிடைக்கும் பேரங்காடி என்பது அதன் பொருள். ஆனால், தமிழில் மோர் சூப்பர் மார்க்கெட் என்று ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். விட்டால் அடுத்து தயிர் சூப்பர்மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது!"

மொழிபெயர்ப்பு

அடுத்த ட்வீட்டில், "எம்ஜிஆர் காலத்து அரசாணைப்படி ஒரு கடையின் பெயர் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தால், தமிழில் அப்படியே எழுதாமல் மொழிபெயர்த்து எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விருப்பம் போல பெயர் வைத்து, விருப்பமான மொழியில் எழுதுகின்றனர்!" என்று பதிவிட்டுள்ளர்.

நியாயம்தான்

நியாயம்தான்

டாக்டர் ராமதாஸ் வருத்தப்படுவது நியாயம்தான்.. சரியான ஆதங்கம்தான்.. ஆனால் இது ஏதோ திடீரென முளைத்த சமாச்சாரம் இல்லை.. இப்படித்தான் பெரும்பாலான இடங்களில் பெயர் பலகைகள் ஆங்கிலத்திலும், அல்லது தமிங்கிலீஷிலும் கலந்து தொங்கி கொண்டிருக்கின்றன.

விளக்கம்

விளக்கம்

எனினும் டாக்டரின் இந்த பதிவிற்கு ட்விட்டர்வாசிகள் விளக்கமும் தந்துள்ளனர்.. "More" என்பது Brand Name, அதை தமிழில் மொழிபெயர்க்க முடியாது, கூடாது! Facebook என்பதை முகநூல் என தவறாக மொழிபெயர்ப்பது போல் நீங்களும் More ஐ மொழிபெயர்க்க எதிர்பார்க்குறீங்களேய்யா?" என்று கேள்வி எழுப்புகிறார். இன்னொருவர், "பெயர்ச்சொல் எல்லாம் அப்படியே ஒலி பெயர்த்துத்தானே வரும். ஒரு வேளை அவங்க மோர் சூப்பர் மார்கெட் என்பதுதான் சரி. ஆங்கிலத்தில்தான் நாங்கள் More என்று ஒலி பெயர்திருக்கிறோம் என்றால் என்ன செய்ய முடியும்?" என்றும் விளக்கம் தந்துள்ளர்.

சந்தேகம்

சந்தேகம்

இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் ராமதாசிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.. "ஐயா தமிழ் நாட்டில் microsoft போன்ற நிறுவனங்களும் உள்ளன. Microsoft என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்த்து கூறவும். அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். இந்த கேள்வி Amazon,swiggy,zomato ,flipkart கும் பொருந்தும். Google கும் பொருந்தும்" என்று கேட்டுள்ளார். ஆக.. ராமதாஸ் போட்ட இந்த 2 ட்வீட்களும் கமெண்ட்களுடன் சேர்ந்தே வைரலாகி வருகின்றன.

English summary
pmk founder dr ramadoss tweet about english name boards in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X