சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்

இந்தி மொழியை திணித்தவர்களுக்கு தண்டனை கிடையாதா என ராமதாஸ் கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக மாணவரை அவமதித்த விமான நிலைய அதிகாரி- வீடியோ

    சென்னை: இந்தி வெறியை திணித்தவர்களுக்கு தண்டனை கிடையாதா என்று டாக்டர் ராமதாஸ் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    பொறியியலில் பிஹெச்டி பட்டம் பெற்றவர் ஆப்ரஹாம் சாமுவேல். 27 வயதான இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். 2 தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து மும்பை ஏர்போர்ட் வந்து இறங்கினார்.

    அப்போது அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை ஹிந்தியில் பேச சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஆபிரஹாம், தமக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஹிந்தி தெரியாது.. என்று சொல்லி இருக்கிறார்.

    அதிகாரி பணி நீக்கம்

    அதிகாரி பணி நீக்கம்

    உடனே ஒரு அதிகாரி "அப்படீன்னா தமிழ்நாட்டுக்கே போக வேண்டியதுதானே என்று அவமானப்படுத்தியதுடன், கிளியரன்ஸ் கொடுக்கவும் மறுத்திருக்கிறார். இது சம்பந்தமான விவகாரம் புகைந்ததும், குறிப்பிட்ட அந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    ஊட்டி வளர்த்தவர்கள்

    இந்த விவகாரத்தில்தான், டாக்டர் ராமதாஸ், இந்தி வெறி அதிகாரிக்கு மட்டும் தண்டனையா? இந்தி வெறியை ஊட்டிவளர்த்தவர்களுக்கு தண்டனை கிடையாதா என்று கேள்வி எழுப்பி ஒரு ட்வீட் போட்டுள்ளார். தன் பதிவில் அவர் சொல்லியுள்ளதாவது:

    என்ன தண்டனை?

    என்ன தண்டனை?

    "மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாததற்காக தமிழக மாணவர் இந்திவெறி அதிகாரியால் அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான அதிகாரி தண்டிக்கப்பட்டால் மட்டும் போதுமா? இத்தகைய உணர்வை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை?" என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.

    அக்கறை செலுத்துபவர்

    அக்கறை செலுத்துபவர்

    பொதுவாக தமிழக மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து குரல் கொடுப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அதிலும் பிற மாநிலங்களில் தங்கி படிக்கும், தங்கி வேலைபார்க்கும் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்துபவர். இப்போதும் அப்படித்தான் அக்கறையுடன் ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.

    யாரை சொல்கிறார்?

    யாரை சொல்கிறார்?

    ஆனால் வழக்கம்போல் யாரை சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை. அன்றைய காலத்தில் இந்தி திணிப்பை புகுத்திய காங்கிரசையா? அரசு அலுவலர்கள் எல்லாம் ஹிந்தியில்தான் பேச வேண்டும், ஹிந்தி மொழியை வளர்க்க வேண்டும் என்று இப்போதும் கூட அறைகூவல் விடுத்து கொண்டிருக்கும் பாஜகவையா? என தெளிவுபடுத்தாமல் வழக்கம்போல் மண்டைகாய வைத்துள்ளார் ராமதாஸ்.

    English summary
    PMK Founder Dr. Ramdoss condemn TN youth insulted by Mumbai Airport incident for Hindi Language
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X