சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே.. பழமொழி சொல்லி.. மகாராஷ்டிராவை போட்டு தாக்கும் ராமதாஸ்!

மகாராஷ்டிரா அரசியல் நிலை குறித்து ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்கள் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ramadoss tweet about maharastra politics | மகாராஷ்டிரா அரசியலை போட்டு தாக்கும் ராமதாஸ்!

    சென்னை: "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்" என்று நம்ம ஊர் பழமொழிகளை குறிப்பிட்டு மகாராஷ்டிராவின் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

    மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சி நேற்று அமலுக்கு வந்தது. மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்த பாஜக, அடுத்தபடியான இடத்தை பிடித்த சிவசேனா, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்க முடியாத சூழலில் இந்த குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிலும், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு முன்பாகவே குடியரசு தலைவர் ஆட்சியை பரிந்துரைத்து கடுமையான அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறது.

    பாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி? சபாநாயகர் பதவியை நாடும் காங்?.. இதுதான் டீல்!பாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி? சபாநாயகர் பதவியை நாடும் காங்?.. இதுதான் டீல்!

    கவனிப்பு

    கவனிப்பு

    இந்தியாவில் ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கும் ஆட்சி விவகாரம் என்ற இதனை கருதிவிட முடியாது என்பதால்தான், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுமே மகாராஷ்டிரா அரசியலின் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    அதன் வெளிப்பாடுதான், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ட்வீட் பதிவுகள்.. ஒன்றல்ல.. மொத்தம் 3 ட்வீட்கள் அடுத்தடுத்து போட்டு அம்மாநில அரசியல் சூழல் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் டாக்டர்!

    வாக்காளர்கள்

    அதில் "மராட்டியத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாததால் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறை. என்ன செய்வது எல்லோருக்கும் கைக்கு எட்டியது, எவருக்கும் வாய்க்கு எட்டவில்லை. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. வாழ்க ஜனநாயகம்....வளர்க வாக்காளர்கள்!" என்கிறது முதல் பதிவு

    சந்தர்ப்பவாதம்

    "கொள்கைக்காக பாஜகவுடன் சிவசேனா கூட்டணி. பதவிக்காக எதிரணியில் உள்ள காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா கைகோர்ப்பு. உள்ளதும் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆதரவு அளிக்க சோனியா காந்தி மறுப்பு. மொத்தத்தில் சந்தர்ப்பவாதத்தை சமைத்தவர்கள் சந்தியில் நிற்கின்றனர்!" இது இரண்டாவது பதிவு!

    ஆளுநர் ஆட்சி

    "தேர்தலுக்கு ஒரு கட்சி, ஆட்சி அமைக்க இன்னொரு கட்சி. அதற்கு முட்டுக்கொடுக்க மூன்றாவது கட்சி. சந்தர்ப்பவாதம் சரியாக பொருந்தாததால் மாறியது காட்சி. நடைமுறைக்கு வந்தது ஆளுனர் ஆட்சி. வாக்காளர்களை முட்டாள்களாக்க முயன்று ஏமாந்து போன மராட்டிய கட்சிகள். வாழ்க ஜனநாயகம்! வளர்க வாக்காளர்கள்!" இது மூன்றாவது பதிவு!

    பாஜக

    பாஜக

    இந்த 3 ட்வீட்களில், சிவசேனா, காங்கிரஸ் குறித்து நேரடியான கருத்தை ராமதாஸ் சொல்லி இருப்பினும், பாஜகவின் அணுகுமுறை குறித்தோ அல்லது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது என்றோ பகிரங்கமாக சொல்லவில்லை.. எப்படி இருப்பினும், ராமதாஸின் இந்த 3 ட்வீட்களின் ஒவ்வொரு வார்த்தையும் 100க்கு 100 உண்மையே!

    English summary
    pmk founder dr ramadoss says his opinion about maharashtra politics and criticized congress too
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X