சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூரப்பா.. அடேங்கப்பா.. அகில உலக சர்வாதிகாரி.. டாக்டர் ராமதாஸ் பொளேர் தாக்கு!

துணைவேந்தர் சூரப்பாவுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Dr Ramadoss slams Annamalai University Vice Chancellor Surappas

    சென்னை: "சூரப்பா.. அடேங்கப்பா.. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அகில உலக சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சரமாரியாக விமர்சித்துள்ளார். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்போரை தண்டிக்க வேண்டும் என்று சூரப்பா பேசியதற்கு டாக்டர் ராமதாஸ் தனது தரப்பு எதிர்ப்பினை மிக ஆழமாக பதிவு செய்துள்ளார்.

    சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டபோதே கடுமையாக எதிர்த்தவர் டாக்டர் ராமதாஸ்.

    "கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமிக்கக் கூடாது.. தமிழரல்லாத ஒருவரை தமிழ்நாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது... தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

    அமித் ஷா, மோடி தலையை எடுப்போம்.. மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர்... கைதுஅமித் ஷா, மோடி தலையை எடுப்போம்.. மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர்... கைது

    கேள்விகள்

    கேள்விகள்

    உதவிப் பேராசியருக்கே இந்த நிலை எனும் போது தமிழே தெரியாதவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் ஏராளமாக இருக்கும் போது இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இறக்குமதி செய்து துணைவேந்தராக நியமிப்பதை எப்படி ஏற்க முடியும்" என்று அடுக்கடுக்கான கேள்விகளை அன்று எழுப்பியவர் ராமதாஸ்.

    சூரப்பா

    சூரப்பா

    தற்போது இதே சூரப்பாவை கடுமையாக சாடி காரசார ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இதற்கு காரணம் சூரப்பா புதிய கல்வி கொள்கையை ஆதரித்துள்ளதுடன், அந்த கொள்கையை எதிர்ப்போரை தண்டிக்க வேண்டும் என்றும் சூரப்பா ஆணவமாக பேசியதுதான்.

    புதிய கல்வி கொள்கை

    இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்கள் இவைதான்: "புதிய கல்விக்கொள்கையை ஒரு வரி கூட மாற்றாமல் செயல்படுத்த வேண்டும்; தவறுவோரை தண்டிக்க வேண்டும்: சுரப்பா - அடேங்கப்பா... இவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரா அல்லது அகில உலக சர்வாதிகாரியா... தெரியவில்லையே?" இது ஒரு ட்வீட்

    புரியவில்லையே

    "பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்களுடன் ஆளுனரின் செயலாளர் ராஜகோபால் இன்று ஆலோசனை: செய்தி-இப்படியெல்லாம் செய்ய ஆளுனரின் செயலாளருக்கு எந்த சட்டத்தில் அதிகாரம் உள்ளது? என்ன நடக்கிறது என்பதே புரியவில்லையே?" இது இன்னொரு ட்வீட்

    அதிகாரம்?

    "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுனரின் செயலர் ஆய்வு நடத்துவது குறித்து தமக்கு தெரியாது என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தகவல். அமைச்சருக்கே தெரிவிக்காமல் ஆய்வு நடத்தும் அளவுக்கு ஆளுனரின் செயலாளரிடம் அதிகாரம் குவிந்து கிடக்கிறதா?" இது மற்றொரு ட்வீட்

    உறுதி

    உறுதி

    ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்படுபவர்தான் ஆளுநர் என்பது பொதுப்படையான உண்மை. (புதுவை விதிவிலக்கு) ஆனால், கூட்டணியில் உள்ள கட்சி என்பதையும் மறந்து, ஆளுநர் தரப்பை ராமதாஸ் கண்டித்துள்ளது வரவேற்கத்தக்கதே. எந்த கூட்டணியில் இருந்தாலும் சரி, மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் ராமதாஸ் என்றுமே உறுதியாக உள்ளார் என்பது இந்த ட்வீட்கள் ஒரு உதாரணம்.

    English summary
    PMK Founder Dr Ramadoss slams Annamalai University Vice Chancellor Surappas New Education Policys opinion
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X