சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

Dr Ramadoss urges to extend curfew to Mar 31

தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இதுபற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்! கொரோனா பரவலை தடுப்பதில் இரவும், பகலுமாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் பணி போற்றத்தக்கது. அவர்கள் அனைவருக்கும் மாலை 5.00 மணிக்கு கைகளைத் தட்டி நன்றி தெரிவிப்போம்.

தமிழ்நாட்டில் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், அதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களை சென்றடையாததால் வெள்ளிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் வாரச்சந்தைகள் நடைபெற்றுள்ளன. இது அரசு நடவடிக்கையின் நோக்கத்தையே சிதைத்து விட்டது! தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை வாரச்சந்தைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் பொறுப்பு ஆகும். சந்தை பொறுப்பாளர்களை அழைத்து பேசியும், மக்களுக்கு பொது அறிவிப்பின் மூலம் தகவல் தெரிவித்தும் வாரச்சந்தை தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் மருத்துவத் துறையினருடன் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் காவல்துறையினரும் பணியாற்றுவது பாராட்டத்தக்கது. அவர்களுக்கு எமது வணக்கங்கள்!

English summary
PMK Founder Dr Ramadoss has urged that TamilNadu Govt Should Extedn the Curfew to March 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X