சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போதுமானதல்ல- டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மட்டும் போதுமானது அல்ல; மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.

Dr Ramadoss urges to Shut down All TASMAC liquor shops to prevent Coronavirus

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது::

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும்!

Dr Ramadoss urges to Shut down All TASMAC liquor shops to prevent Coronavirus

இவை அனைத்தையும் விட முக்கியமானது மக்களே... விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்!. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has urged that Shut down All TASMAC liquor shops to prevent Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X