சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களிடம் மதுவை நெருங்க விடா மாவீரன் பிரபாகரன்.. மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்.. ராமதாஸ் !

பிரபாகரன் பிறந்த நாளுக்கு ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "மதுவை நெருங்க விடா மாவீரன்.. மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்" என்று பிரபாகரனின் பிறந்த நாளுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Dr ramadoss wishes prabhakarans birthday

அதன்படி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்தடுத்து 2 ட்வீட்டுகளையும் பதிவிட்டுள்ளார்.

65-வது பிறந்த நாள்- பிரபாகரன் வாழ்வே எங்களது கொள்கை சாசனம்: சீமான் 65-வது பிறந்த நாள்- பிரபாகரன் வாழ்வே எங்களது கொள்கை சாசனம்: சீமான்

"பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள். படைகளால் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து, சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதை!" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ட்வீட்டில், "மாவீரர்கள் மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொழி, கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; தாங்கிக் கொள்ள முடியாதவை. இந்த சீரழிவுகளை சரி செய்து தமிழர்களின் உன்னத, அறம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவாவது அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக மொழி, நலன், வளம், போன்றவற்றில் எந்நேரமும் அக்கறை செலுத்தி வருபவர் டாக்டர் ராமதாஸ்.. குறிப்பாக மதுவிலக்கு, மற்றும் கலாச்சார சீரழிவு எதுவானாலும் அதற்கு முதலாவதாக வந்து குரல் கொடுப்பதும் டாக்டர்தான்.

"பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன்" என்று பிரபாகரனுக்காக தெரிவித்த வாழ்த்திலும் டாக்டர் ராமதாஸின் ஆழ்மனசு எண்ணம் பிரதிபலிக்கிறது. அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என்ற ராமதாஸின் இந்த எதிர்பார்ப்பு நிறைந்த ட்வீட்டினை பலரும் வரவேற்று கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.

English summary
pmk founder Dr ramadoss wishes prabhakarans birthday and praised him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X