சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எத்தனை சகுனிகள் வந்தாலும்.. என்ன சதி செய்தாலும்.. எதிர்காலம் பாமகவுக்குதான்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி

பிறந்த நாள் விழாவில் டாக்டர் உருக்கமாக பேசினார்

Google Oneindia Tamil News

சென்னை: "மகாபாரதத்தில் சகுனி வெற்றிபெற்றானா என்ன. எத்தனை சகுனிகள் சூழ்ச்சி செய்தாலும் சரி.. எதிர்காலம் பாமகவுக்குத்தான். மாற்றத்தை அன்புணி ஏற்படுத்துவார். முதுமை என்னை எவ்வளவு தான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன்" என்று டாக்டர் ராமதாஸ் உருக்கமாக கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் 80-வது பிறந்த நாள் விழாவான முத்துவிழாவினை பாமக தொண்டர்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

டாக்டர் ராமதாஸின் பிறந்த நாள் விழா திருவேற்காட்டில் நடைபெற்றது. அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

பசு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.. சுவாச பிரச்சனையை தீர்க்கிறது.. உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு பசு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.. சுவாச பிரச்சனையை தீர்க்கிறது.. உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு

ஜிகே மணி

ஜிகே மணி

என்னுடைய இந்த பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து நடத்தலாம் என்று அன்புமணியும், ஜி.கே. மணியும் திட்டமிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் 2 பேருமே என் மீது தனிப்பட்ட பாசம் வைத்திருப்பவர்கள். கூப்பிட்டிருந்தால் நிச்சயம் வந்திருப்பார்கள்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

ஆனால் நான்தான், என்னோடு போராடிய, சிறை சென்ற பாட்டாளிகளோடு இணைந்து இந்த விழா கொண்டாட வேண்டும் என்றேன். 1980-ம் ஆண்டு முதல் தமிழக மக்களுக்காக, மண்ணுக்காக, மொழிக்காக போராடி வருகிறோம். ஆனால் என்னமோ இன்னும் அங்கீகாரம் தரவில்லை.

அன்புமணி

அன்புமணி

அன்புமணி போன்ற தலைவரை காட்டுங்களென்று வெளிப்படையாகவே சொன்னேன். ஆனால் அது மறைக்கப்படுகிறது. இந்த மாதிரி சூழ்ச்சிகள் எத்தனை நாள் பலிக்கும்? மகாபாரதத்தில் சகுனி வெற்றிபெற்றானா என்ன? எத்தனை சகுனிகள் சூழ்ச்சி செய்தாலும்சரி, பாமகவுக்குதான் எதிர்காலம்.. நிச்சயம் அன்புமணி மாற்றத்தை ஏற்படுத்துவார்.

முத்துவிழா செய்தி

முத்துவிழா செய்தி

பாமகவின் இலக்கை அடைய 1 கோடி இளைஞர்களை சந்தியுங்கள். பாமகவின் வரலாற்றை அவர்களிடம் சொல்லுங்கள் அவர்களை அன்புமணியின் பின்னால் திரளச்செய்யுங்கள். முதுமை என்னை எவ்வளவு தான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன் என்று இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். இதுவே எனது முத்துவிழா செய்தி" என்றார்.

English summary
Dr Ramadoss says about Anbumani Ramadoss and PMK Volunteers in his Birthday function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X