சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டியிடும் 7ல்.. தர்மபுரியில் மட்டும் டாக்டர் ராமதாஸ் காட்டும் ஸ்பெஷல் அக்கறை!

தருமபுரி தொகுதியில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    தர்மபுரியில் ஒரு வீடு விடாமல் பிரச்சாரம் செய்யும் டாக்டர் ராமதாஸ்

    சென்னை: இருக்கும் 7 தொகுதிகளில் தருமபுரியில் மட்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் ஸ்பெஷல் அக்கறை செலுத்துகிறார்!

    வன்னியர்களின் பெல்ட்டில் உள்ள தருமபுரி தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் இங்கு களமிறக்கப்பட்டுள்ளார்.

    சிட்டிங் எம்பிதான்.. பழகின தொகுதிதான் என்றாலும்.. இந்த முறை சில சிக்கல்கள் பாமகவுக்கு எழுந்துள்ளது. முதல் காரணம், இதே தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடுபவர் டாக்டர் செந்தில்குமார். இவர் வன்னியர் என்பதால் ஓட்டுக்கள் நிறையவே பிரிய வாய்ப்புள்ளது.

    விழுப்புரத்தில் யாருக்கு வெற்றி? கடந்த கால தேர்தல் வரலாறு என்ன சொல்கிறது.. இதை பாருங்க!

    வேல்முருகன்

    வேல்முருகன்

    இரண்டாவதாக, காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது செம கடுப்பில் உள்ளனர். அதிருப்தியில் இருந்தால்கூட பரவாயில்லை.. ஆனால் வேல்முருகனுக்கு ஆதரவு தர.. வேல்முருகனோ திமுகவுக்கு ஆதரவு தர.. இதன்மூலமும் பாமக ஓட்டுகள் நிறைய பிரிய சான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது.

    தனி கவனம்

    தனி கவனம்

    இதைதவிர, அதிமுகவின் சப்போர்ட் இந்த தொகுதியில் பாமகவுக்கு குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் எம்பி தேர்தலை விட, இடைத்தேர்தல் நடக்க உள்ள அரூர், பாப்பிரெட்டி என்ற இந்த சட்டமன்ற தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதைதவிர திமுகவுக்கென்று ஒரு தனி வாக்கு வங்கியும் உள்ளது.

    விரும்பி அழைத்து வந்து கட்சியில் சேர்த்த முல்லைவேந்தனை சஸ்பெண்ட் செய்தது திமுக! விரும்பி அழைத்து வந்து கட்சியில் சேர்த்த முல்லைவேந்தனை சஸ்பெண்ட் செய்தது திமுக!

    காரில் பயணம்

    காரில் பயணம்

    இப்படிப்பட்ட சூழலில், ராமதாஸ் இங்கு வந்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து வருகிறாராம் ராமதாஸ். அது தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் காரில் பயணித்து அம்மக்களை சந்திக்கிறார்.

    பொறுமை, அக்கறை

    பொறுமை, அக்கறை

    நாள்தோறும் 10 கிராமங்கள் என்று கணக்கு வைத்து சிரமம் பார்க்காமல் செல்கிறார். மக்களின் குறைகளையும் பொறுமையாக கேட்கிறார். எல்லா பிரச்சனைகளும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் வாக்கும், நம்பிக்கையும் தருகிறாராம். ராமதாஸ் சென்று குறைகள் என்னவென்று கேட்பதற்கு முன்னமேயே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம்.

    திண்ணை பிரச்சாரம்

    திண்ணை பிரச்சாரம்

    இத்தனை ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்பியாக அன்புமணி இருந்தாலும், பெரிய அளவிலான அதிருப்தியை தொகுதியில் அவர் சம்பாதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். எனினும் மிச்சம் மீதி குறைகளையும் இல்லாமல் போக்க இந்த திண்ணை பிரச்சாரத்தை டாக்டர் ராமதாஸ் மேற்கொள்கிறார்.

    மெஜாரிட்டி

    மெஜாரிட்டி

    அது மட்டுமில்லை.. இருக்கும் 7 தொகுதிகளில் மிகவும் வலிமையானதும், முக்கியமானதும் தருமபுரிதான். அதனால் பாமகவை திமுகவை விட அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கவே ராமதாஸ் இவ்வளவு சிரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    English summary
    PMK Founder Dr Ramadosss focuses on Dharmapuri Constitution for his Son Dr Anbumani Ramadoss
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X