• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சூப்பர்.. "அமல்படுத்திய" திமுக.. பட்ட கஷ்டமெல்லாம் போயே போச்சு.. "டாக்டர்" போட்ட ஹேப்பி ட்வீட்!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றுதான் புலம்பியபடி ஒரு ட்வீட் போட்டிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. ஆனால், இப்போது 2 ஹேப்பி ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அந்த 2 ட்வீட்களும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பதிவாகும்.

  கல்வியில் Vanniyar Reservation நடைமுறைக்கு வந்தாச்சு | Oneindia Tamil

  வழக்கமான தேர்தல் போல இல்லாமல் இந்த முறை வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் ரொம்ப பிடிவாதமாக இருந்தார்.. பலகட்ட போராட்டம் நடத்தி இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

  தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்தார். இது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

  பாஜக பற்ற வைத்த தீ.. பாஜக பற்ற வைத்த தீ.. "சாமி"க்கு எல்லாம் தெரியுமாமே.. அடுத்து என்ன நடக்குமோ.. மிரட்சியில் புதுச்சேரி!

  திமுக

  திமுக

  ஆனாலும், இந்த சட்டம் நிரந்தரமானது இல்லை என்று கூறப்பட்டது.. இதை திமுக ஆட்சியில் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி இருந்தார்.. இந்நிலையில், நேற்று ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 11 உறுப்பினர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கின்றன. இத்தனை ஆண்டுகள், இத்தனை பதவிகள் காலியாக இருந்தும் கூட கடந்த 8 ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திலிருந்து ஒரு உறுப்பினர் கூட இல்லை.

  கோரிக்கை

  கோரிக்கை

  வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கோரியும் கிடைக்கவில்லை. 10.50% வன்னியர் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு கூட அச்சமூக பிரதிநிதி இல்லை. வன்னியர்களுக்கு சமூகநீதி எவ்வாறு கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

  மகிழ்ச்சி

  மகிழ்ச்சி

  இப்போது மகிழ்ச்சியுடன் ஒன்றுக்கு 2 ட்வீட்களை போட்டுள்ளார்.. இதுவும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய ட்வீட்களே.. அதில், "தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியில் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

  சமுதாயம்

  சமுதாயம்

  வன்னியர்களுக்காக இட ஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்துதல், பிற சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்றுத் தருதல் ஆகியவை தான் நமது இலக்குகள் ஆகும். இந்த இலக்குகளை நோக்கிய நமது சமூகநீதி பயணம் தொடரும்; வெற்றியும் நம் வசமாகும்!" என்று பதிவிட்டுள்ளார். ராமதாஸ் போட்ட இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்..

   தலைமுறை

  தலைமுறை

  "இதெல்லாம் உங்களால் தான் சாத்தியம் அய்யா.. எனக்கு இல்லாவிட்டாலும் என் அடுத்த தலைமுறை பயன் பெறும் நன்றிகள் பல" என்று பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் சிலரோ, "எப்ப பாரு என்ன, வன்னியர்கள், வன்னியர்கள்.. உங்களுக்கு வேற பிரச்சனையே நாட்டில் இல்லையா" என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருந்தாலும் அன்னைக்கு இந்த இடஒதுக்கீடுக்காகத்தான் அவ்ளோ பாடுபட்டார் டாக்டர் ராமதாஸ்.. இப்போது மகிழ்ச்சியுடன் ட்வீட்களை பதிவிட்டு வருவது பாமக தொண்டர்களுக்கு குஷியை ஏற்படுத்தி வருகிறது.

  English summary
  Dr Ramadosss Happy tweet about Vanniyas 10.5% Reservation
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X