சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்!

பத்திரிகையாளர்களுக்கு முகவரி தந்தது பாமக என்று ராமதாஸ் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பத்திரிகையாளர் சங்கத்திற்கு அட்ரஸ் கொடுத்ததே பாமகதான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பத்திரிகையாளர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பேசி வருவதாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. நாய்ங்களா, சண்டாள பசங்களா, கம்மனாட்டிங்களா.. என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்தி ராமதாஸ் பேசியதாகவும், இது சம்பந்தமான வீடியோக்களும் வெளியாகியது.

இதற்கு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டாக்டர் ராமதாஸ், "பழைய செய்திதான், இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக" என்று சில தகவல்களை தனது பேஸ்புக் பதிவில் போட்டுள்ளார். அந்த பதிவு இதுதான்:

தெரியாத உண்மை

தெரியாத உண்மை

"பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகம் 63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, சென்னை -18 என்ற முகவரியில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தினப்புரட்சி செயல்பட்டு வந்தது. இந்த விஷயங்கள் பெரும்பான்மையான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

பத்திரிகையாளர் சங்கம்

பத்திரிகையாளர் சங்கம்

ஆனால், பெரும்பான்மையினருக்கு தெரியாத உண்மை.... இதே அலுவலகத்தில் தான் தமிழ்நாடு பத்திரிகையாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பது தான். புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் அண்ணா பாலு, பொதுச்செயலாளர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் ஆகியோர் என்னை அணுகி தங்கள் சங்கத்துக்கு அலுவலகம் இல்லை என்றும், அதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர்.

திமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்கதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க

முதல் அலுவலகம்

முதல் அலுவலகம்

அதையேற்ற நான் பா.ம.க. அலுவலகத்தின் மாடியில் எனது சொந்த செலவில் தற்காலிக அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். அது தான் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்திற்கு முதல் முகவரியாகும். அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், பிற பத்திரிகையாளர்களும் எந்த நேரம் வேண்டுமானாலும் அங்கு வரலாம்; தங்கிச் செல்லலாம் என்ற அளவுக்கு பா.ம.க. தலைமை அலுவலகம் பத்திரிகையாளர்களின் புகலிடமாக திகழ்ந்தது.

கலைஞர்

கலைஞர்

அதுமட்டுமின்றி, அப்போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொள்வேன். ஒருமுறை திமுக தலைவர் கலைஞரும் என்னுடன் பத்திரிகையாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

சமூகநீதி

சமூகநீதி

அப்போதிருந்த பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போதும் எனது நண்பர்கள் தான். அப்போதைய பத்திரிகையாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் ஊடக அறத்தைக் கடைபிடித்தவர்கள். சிலரது நெஞ்சத்தில் வஞ்சம் இருந்தாலும் பெரும்பான்மையினர் சமூகநீதிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தான். அப்போது ஊடகத்துறையில் அறம் உயிரோடு இருந்தது.

English summary
PMK Fonder Dr Ramadoss has said that the first address to journalists was the PMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X