சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா?.. வேண்டாமா?.. டாக்டர் கூறும் அட்வைஸ் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கு மருத்துவ பேராசிரியர் டாக்டர் முத்துச் செல்லக்குமார் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் முத்துச் செல்லக்குமார் தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், கொரோனா காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

அப்படி பயன்படுத்தினால் காற்று மூலம் ஏதேனும் நோய் பரவுதல் நடைபெற்று விடுமோ, கிருமிகள் வீட்டிற்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. பொதுமக்களின் இந்த சந்தேகங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலைகொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை

பொறியாளர்கள்

பொறியாளர்கள்

அறிவியல் அறிஞர்கள், பொறியாளர்கள் என ஆராய்ச்சி செய்துள்ளார்கள். மருத்துவர்களே ஏரோ டைனமிக்ஸ் படிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. Indian society of heating refrigerating and air conditioner engineers (ISHARE) என சொல்வார்கள். இந்த ISHAREம் அது போல் CPWD Central Public Works Departmentம் இணைந்து கூறுவது என்னவெனில் ஏசியை பயன்படுத்தலாம்.

பராமரித்தல்

பராமரித்தல்

ஆனால் வீட்டில் காற்றோட்டமான வசதி செய்யப்பட வேண்டும். அந்த ஏசியை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பராமரித்தல் வேண்டும். காற்றில் ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதத்திற்கு இருக்க வேண்டும். ஜன்னல்கள் லைட்டாக திறந்திருக்க வேண்டும். அறையில் எக்ஜாஸ்ட் ஃபேன் இருந்தால் அதை பயன்படுத்துவது நல்லது.

ஜன்னல்கள்

ஜன்னல்கள்

அது போல் வீடுகளில் ஃபேனை பயன்படுத்தினாலும் வென்டிலேஷன் இருக்க வேண்டும். அறை வெப்பநிலை, காற்றோட்டம், ஈரப்பதம் ஆகிய மூன்றையும் சரியாக பயன்படுத்தினால் ஏசி, பேனை பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் தனி வீடு, மாடி வீடு, அபார்ட்மென்ட், பிளாட்களில் வசிப்போர் ஜன்னல்களை பார்த்து திறக்க வேண்டும்.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

பக்கத்து வீட்டுக்காரரின் ஜன்னலும் இருந்தால் அவர்கள் தும்மும்போதும் இருமும் போதும் காற்றில் கலந்து கிருமிகள் உங்கள் வீடுகளில் ஜன்னல் வழியாக வந்துவிடும். டெசர்ட் கூலர்களை பயன்படுத்துவோர் ஏர் பில்டர்களை பொருத்திவிட்டு அதை பயன்படுத்தலாம். பொதுவாக சென்ட்ரலைஸ்டு ஏசிக்களை பயன்படுத்தும்போதுதான் பிரச்சினைகள் வருகிறது என்கிறார்கள்.

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

குறிப்பாக உணவு விடுதிகள், மருத்துவமனைகள், மால்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சென்ட்ரலைஸ்டு ஏசிக்களை பயன்படுத்தும் போது பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. மேற்கண்ட பகுதிகளுக்கு வருவோர் தொற்று இருந்து அறிகுறி இருந்தும் , அறிகுறி இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் சென்ட்ரலைஸ்டு ஏசியில் உள்ள காற்று வெளியே செல்ல வழியில்லை. அதனால் அந்த கிருமியுடன் இருக்கும் காற்று அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

ஜப்பான் கப்பல்

ஜப்பான் கப்பல்

அந்த தட்பவெப்பநிலையால் ஒருவரிடம் இருந்து வைரஸ் இன்னொருவரிடம் பரவும். சீனாவில் கூட சென்ட்ரலைஸ்டு ஏசி மூலம்தான் கிளஸ்டராக கொரோனா பரவியது. அது போல் டயமண்ட் பிரின்ஸஸ் எனப்படும் ஜப்பான் நாட்டு கப்பலில் தங்கியிருந்தவர்களுக்கும் பரவியது.

காற்றில் வேகம்

காற்றில் வேகம்

ஈரப்பதம் இல்லாத காற்றால் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. பொதுவாக மழைக்காலத்தில்தான் காய்ச்சல், சளி ஆகியவை ஏற்படுகிறது. இந்த சீசனில் குளிர்ந்த வானிலை நிலவும். காற்று டிரையாக இருக்கும். அப்போது ஈரப்பதம் குறைந்து வைரஸ் கிருமிகள் காற்றில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

என்ன செய்யலாம்

என்ன செய்யலாம்

இந்த ஈரப்பதம் குறைவதால் என்ன பிரச்சினை எனில், நுரையீரலில் நூலிழை போல் இருக்கக் கூடிய சிலியா சரியாக வேலை செய்யாது. அப்போது கிருமிகள் எளிதாக உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏசி மெக்கானிக், என்ஜீனியரின் ஆலோசனை பெற்று உங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது இடங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.

English summary
Retired GH Doctor S. Muthu Chellakumar advises about AC machines can be used in house during this Corona pandemic or not?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X